முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உக்ரைனில் ரஷிய ராணுவம்: ஆதாரம் வெளியிட்ட அமெரிக்கா

புதன்கிழமை, 23 ஏப்ரல் 2014      உலகம்
Image Unavailable

 

வாஷிங்டன், ஏப்.24 - உக்ரைன் கிழக்குப் பகுதியில் முகாமிட்டுள்ள ஆயுதம் ஏந்திய கிளர்ச்சியாளர்கள், உண்மையில் ரஷிய ராணுவத்தினர் அல்லது அதன் உளவுத்துறை அதிகாரிகள் என்பதற்கான புகைப்பட ஆதாரத்தை அமெரிக்கா வெளியுறவுத்துறை வெளியிட்டுள்ளது.

இதன் மூலம் அந்தப் பிராந்தியத்தில் தங்கள் ராணுவம் ஊடுருவவில்லை என்று மறுத்து வரும் ரஷியாவின் கூற்றினை பொய் என்பதை நிரூபிக்க புதிய முயற்ச்சியில் அமெரிக்கா ஈடுபட்டுள்ளது. இதுகுறித்து அமெரிக்கா வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் ஜேன் காசி கூறுகையில், உக்ரைன் அதிகாரிகளால் எடுக்கப்பட்ட இத்தகைய புகைப்படைங்களை சர்வதேச பத்திரிக்கை அல்லது டுவிட்டர் இணையதளத்தில் காணலாம். இவை ரஷிய ராணுவத்தினர்களுக்கும், கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே உள்ள தொடர்பை உறுதி செய்பதற்கான ஆதாரங்களாகும் என்றார்.

ஐரோப்பிய பாதுகாப்பு மற்றும் ஒத்துழைப்பு அமைப்பின் மூலம் அமெரிக்காவிடம் இந்த புகைப்படங்களை உக்ரைன் வழங்கி உள்ளதாக கூறப்படுகிறது. கிரீமியா மற்றும் கிழக்கு உக்ரைன் பிராந்தியத்தில் க்ரம்டார்ஸ்க் நகர் காவல்நிலையத்தை கிளர்ச்சியாளர்கள் கைப்பறிய போது எடுக்கப்பட்ட புகைப்படத்தில், 2008-ல் ஜார்ஜியாவில் பஷிய சிறப்புப் படை வீரர்கள் முகாமிட்டிருந்தபோது அவர்கள் அணிந்திருந்த சிகப்புப் பட்டையைப் போன்ற கிளர்ச்சியாளர்களில் ஒருவர் அணிந்துள்ளார்.

அதே நபர் தற்போது உக்ரைனில் தங்கியிருப்பது இந்தப் புகைப்படங்கள் மூலம் தெரியவந்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்