முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

எல்லை தாண்டியவர் சுட்டுக்கொலை: பாக்., சம்மன்

வியாழக்கிழமை, 30 அக்டோபர் 2014      இந்தியா
Image Unavailable

 

புது டெல்லி, அக் 31 - எல்லை தாண்டியவர் சுட்டுக் கொல்லப்பட்டதை தொடர்ந்து இந்திய தூதருக்கு பாகிஸ்தான் சம்மன் அனுப்பி உள்ளது.

எல்லை தாண்டிய பாகிஸ்தானியர் ஒருவர் இந்திய ராணுவத்தால் சுட்டுக் கொல்லப்பட்டார். அதை தொடர்ந்து இஸ்லாபாத்தில் இந்திய தூதரை நேரில் ஆஜராகுமாறு பாகிஸ்தான் அரசு நேற்று சம்மன் அனுப்பி உள்ளது. இது குறித்து பாகிஸ்தான் அரசு நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

பாகிஸ்தானை சேர்ந்த தவுகீர் என்பவர் எல்லையில் நரோவால் என்ற இடத்தில் புல் அறுத்து கொண்டிருந்தார். அவருடன் மேலும் 2 பேர் இருந்தனர். அப்போது கவனக்குறைவாக எல்லை தாண்டிய தவுகீரை இந்திய எல்லை பாதுகாப்பு படையினர் எந்தவித முன்னெச்சரிக்கையின்றி சுட்டனர். இதனால் காயமடைந்த அவரை பாகிஸ்தான் படையினரிடம் ஒப்படைக்க மறுத்து விட்டனர். பின்னர் அவர் இந்திய எல்லை பாதுகாப்பு படையினர் பாதுகாப்பிலேயே உயிரிழந்தார். இதே போன்று முகமது தின் என்பவரும் சர்வதேச எல்லை கட்டுப்பாடு பகுதியில் ராவ்லா கோட் என்ற இடத்தில் இந்திய படைகளால் சுட்டு கொல்லப்பட்டார். இந்திய வீரர்கள் எல்லையில் கட்டுப்பாடு விதிமுறைகள் மீ றி வருகின்றனர். எனவே இந்தியா பொதுமக்களின் உயிர்களை மதிக்க வேண்டும். விதிமுறை மீறி துப்பாக்கி சூடு நடத்த கூடாது. அதனால் மதிப்பு மிக்க உயிர்கள் இழப்பு ஏற்படுகிறது என்றும் அதில் கூறப்பட்டுள்ளது. அதே நேரத்தில் கடந்த ஆகஸ்ட் மாதத்தில் தவறுதலாக வந்த இந்திய எல்லை பாதுகாப்பு படை வீரரை நல்ல முறையில் நடத்தி நல்லெண்ண அடிப்படையில் அவரை பாகிஸ்தான் ராணுவம் திரும்ப ஒப்படைத்தது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் எல்லையில் நடந்த துப்பாக்கி சண்டையில் இரு தரப்பிலும் 20 பேர் பலியாகினர். காஷ்மீரில் தீவிரவாதிகள் ஊடுருவ உதவுவதற்காக பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி துப்பாக்கி சூடு மற்றும் குண்டு வீசுவதாக இந்தியா குற்றம் சாட்டியுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்