முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சீனாவில் சுகாதார அமைச்சர்கள் மாநாடு

செவ்வாய்க்கிழமை, 12 ஜூலை 2011      உலகம்
Image Unavailable

 

பெய்ஜிங்,ஜூலை.12 - சீனாவில் நடைபெறும் சுகாதார அமைச்சர்கள் மாநாட்டில் பங்கேற்க மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் குலாம் நபி ஆசாத் அரசு முறை பயணமாக சீனா சென்றுள்ளார். பிரேசில், இந்தியா, சீனா, ரஷ்யா, தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகள் இணைந்து ஓர் அமைப்பை உருவாக்கி உள்ளன. அந்த நாடுகளின் பெயர்களில் உள்ள முதல் ஆங்கில எழுத்துக்களை சேர்த்து இதை பிரிக்ஸ் என்று அழைக்கின்றனர். இந்நிலையில் பிரிக்ஸ் அமைப்பின் சார்பில் 4 நாள் சுகாதார அமைச்சர்கள் மாநாடு சீனாவில் நடைபெறுகிறது. 

உலக சுகாதார நிறுவனத்துடனான உறுப்பு நாடுகளின் உறவை மேம்படுத்துவது, தடுப்பூசிகள் உள்ளிட்ட புதிய மருந்துகளை கண்டுபிடிப்பது, எய்ட்ஸ் நோய்க்கு புதிய மருந்துகள் தயாரிக்க நிறுவனங்களை தொடங்குவது போன்றவை குறித்து மாநாட்டில் விவாதிக்கப்படவுள்ளது. மக்கள் தொடர்பான கருத்தரங்கில் கலந்து கொள்வதற்காக கடந்த மாதம் 24 ம் தேதி குலாம் நபி ஆசாத் சீனா சென்று வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்