முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சவரனுக்கு ரூ.120 உயர்வு - தங்கம் விலை மீண்டும் ரூ.20 ஆயிரத்தை தாண்டியது

சனிக்கிழமை, 29 ஆகஸ்ட் 2015      தமிழகம்
Image Unavailable

சென்னை - சில நாட்களாக தங்கம் விலை ஏற்ற இறக்கத்துடன் உள்ளது. கடந்த 19–ந்தேதி ஒரு பவுன் ரூ.19 ஆயிரத்து 744 ஆக இருந்தது. அதை தொடர்ந்து படிப்படியாக விலை அதிகரித்து பவுன் ரூ.20 ஆயிரத்தை தாண்டியது. ஒரு வாரமாக பவுன் ரூ.20 ஆயிரத்தை கடந்து விற்ற தங்கம் நேற்று முன்தினம் ரூ.19 ஆயிரத்து 856 ஆக குறைந்தது. நேற்று பவுனுக்கு ரூ.104 அதிகரித்து ரூ.19 ஆயிரத்து 960 ஆக விற்றது. இன்று மேலும் பவுனுக்கு ரூ.120 உயர்ந்துள்ளது.

ஒரு பவுன் ரூ.20 ஆயிரத்து 80 ஆக உள்ளது. இதன் மூலம் தங்கம் விலை 2 நாட்களுக்கு பிறகு மீண்டும் பவுன் ரூ.20 ஆயிரத்தை தாண்டியது. கிராமுக்கு ரூ.15 அதிகரித்துள்ளது. ஒரு கிராம் ரூ.2,510–க்கு விற்கிறது. தங்கம் மீதான முதலீடு அதிகரிப்பு, திருமண சீசன், இந்திய ரூபாய்க்கு நிகரான அமெரிக்க டாலரின் மதிப்பு அதிகரிப்பு உள்ளிட்ட காரணங்களால் தங்கம் விலை உயர்ந்து வருவதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். வெள்ளியும் கிலோவுக்கு ரூ.415 உயர்ந்துள்ளது. ஒரு கிலோ ரூ.34 ஆயிரத்து 860 ஆகவும், ஒரு கிராம் ரூ.37.30 ஆகவும் உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்