முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

புதிய வெளியுறவுத்துறை செயலாளர் பதவி ஏற்றார்

செவ்வாய்க்கிழமை, 2 ஆகஸ்ட் 2011      இந்தியா
Image Unavailable

 

புதுடெல்லி,ஆக.2 - இந்தியாவின் புதிய வெளியுறவுத்துறை செயலாளராக ரஞ்சன் மாதை நேற்று பதவி ஏற்றுக்கொண்டார். இவர் 1974-ம் ஆண்டு ஐ.எப்.எஸ். பட்டம் பெற்றார். இந்திய வெளியுறவுத்துறை செயலாளராக இருந்த நிரூபமாராவ் கடந்த ஆண்டே பதவியில் இருந்து ஓய்வு பெறவிருந்தார். ஆனால் இவருக்கு பதவி நீடிப்பு கொடுக்கப்பட்டது. அதனையொட்டி நிரூபாமா ராவ் வெளியுறவுத்துறை செயலாளராக இருந்து வந்தார். இந்தியா-அமெரிக்கா இடையே அணுசக்தி ஒப்பந்தம் ஏற்படுவதற்கு இவர் முக்கிய பங்கு வகித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தநிலையில் அமெரிக்க தூதராக நிரூபாமா ராவ் நியமிக்கப்பட்டார். அதனையொட்டி வெளியுறவுத்துறை செயலாளராக ரஞ்சன் மாதை நியமிக்கப்பட்டார். நேற்று அவர் பொறுப்பை ஏற்றுக்கொண்டார். இந்த பதவியில் மாதை 2 ஆண்டுகள் இருப்பார். பதவி ஏற்றவுடன் மாதை நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில் நமது மிகவும் அண்டை நாடுகளுடன் ஆக்கப்பூர்வ ஒத்துழைப்புக்காக பாடுபடுவதுதான் என்றார். பாகிஸ்தானுடன் உறவை சீர்படுத்தி பலப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த பொறுப்பை ஏற்றுள்ளேன் என்றும் மாதை கூறினார். 

அமெரிக்க தூதராக நியமிக்கப்பட்டிருக்கும் நிரூபமாராவ், ஏற்கனவே இலங்கையில் இந்திய தூதராக பணியாற்றிய அனுபவம் அவருக்கு இருக்கிறது. இதனை நினைவுகூறும் வகையில் கொழும்பு சென்று ஈழத்தமிழர்களை படுகொலை செய்த அதிபர் ராஜபக்சேவை சந்தித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்