முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜடேஜா-அஸ்வின் பந்து வீச்சில் நியூசிலாந்து 262 ரன்னில் சுருண்டது

சனிக்கிழமை, 24 செப்டம்பர் 2016      விளையாட்டு
Image Unavailable

கான்பூர் : இந்திய சுழல் பந்து வீச்சாளர் அஸ்வின் மற்றும் ஜடேஜா பந்து வீச்சில் நியூசிலாந்து  அணி முதல் இன்னிங்சில் 262 ரன்னில் சுருண்டது.

கான்பூரில் இந்தியா -நியூசிலாந்து அணிகள் இடையே முதல் கிரிக்கெட் டெஸ்ட் போட்டி நடந்து வருகிறது. இந்த டெஸ்ட் போட்டி இந்திய அணியின் 500வது டெஸ்ட் பந்தயமாகும்.

இந்த போட்டியையொட்டி, இந்திய டெஸ்ட் அணியின் முன்னாள் கேப்டன்கள் சுனில் கவாஸ்கர்,  சவுரவ் கங்குலி, டெண்டுல்கர், கே.ஸ்ரீகாந்த், ஆகியோர் கான்பூர் மைதானத்தில் கவுரவிக்கப்பட்டார்கள்.

நேற்று 3வது நாள் ஆட்டம் நடந்தது. நேற்று முன்தினம் ஒரு விக்கெட் இழப்புக்கு 152 ரன் எடுத்திருந்த நியூசிலாந்து அணி தனது முதல் இன்னிங்சை தொடர்ந்து ஆடியது. அந்த அணி  காலை நேர ஆட்டத்தில் மேலும் 4 விக்கெட்டுகளை இந்திய சுழல் பந்து வீச்சில் பறிகொடுத்தது. அந்த அணியின் கடைசி நேரத்தில் 24 ரன்னுக்கு 5 விக்கெட்டுகளை இழந்தது. இதனால் நியூசிலாந்து ஸ்கோர் 300ரன்னை கூட எட்ட முடியவில்லை. அந்த அணி 262ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. ஜடேஜா 73 ரன்னுக்கு 5 விக்கெட்டுகளை சரித்தார். அவர் ஒரே ஓவரில்  3 பேட்ஸ்மென்களை ஆட்டமிழக்கச்செய்தார். ஆர்.அஸ்வின்  93ரன்னுக்கு 4 விக் கெட்டுகளை சரித்தார்
கான்பூர் கிரின் பார்க் மைதானத்தின் சுழல் பந்து வீச்சை நியூசிலாந்து வீரர்கள் ஆட மிகவும் தடுமாறினார்கள்.

இந்திய சுழல் பந்து வீச்சாளர்கள் ரவீந்திர ஜடேஜாவும், அஸ்வினும் ஆடுகளத்தின் சுழல் பந்து தன்மையை நன்கு பயன்படுத்திக்கொண்டார்கள். அவர்கள்  எதிரணியை குறைந்த ரன்னுக்குள் சுருட்டி இந்திய அணியை வலுவான நிலைக்கு கொண்டு வந்தார்கள்.

2 வது இன்னிங்சில் ஆட்ட முடிவில் இந்தியா ஒரு விக்கெட் இழப்புக்கு  159ரன் எடுத்திருந்தது. இதன் மூலம் இந்தியா இதுவரை ஒட்டுமொத்தமாக 215ரன் கூடுதலாக எடுத்துள்ளது. கே.எல்.ராகுல் 38ரன்னில் அவுட் ஆனார். முரளி விஜய் 64 ரன்னும்  சட்டேஸ்வர் புஜாரா 50ரன்னும் எடுத்து களத்தில் இருந்தார்கள்.

அவர்களது அற்புதமான ஆட்டத்தால் இந்தியா வலுவான நிலையில் இருந்தது. இரு வீரர்களும் இரண்டாவது விக்கெட்டுக்கு அவுட் ஆகாமல் 107ரன் குவித்திருந்தார்கள். அவர்களது விக்கெட்டினை நியூசிலாந்து பந்து வீச்சாளர்களால் எடுக்க முடியவில்லை. விஜய்   152 பந்துகளில்  7 பவுன்டரிகள் மற்றும் ஒரு சிக்சருடன்  64 ரன் எடுத்திருந்தார். புஜாரா  80 பந்துகளில்  8 பவுன்டரிகளுடன்  50 ரன்னை பெற்றிருந்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்