முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஏர்செல்-மேக்சிஸ் வழக்கில் மாறன் சகோதரர்கள் மீது குற்றச்சாட்டுகள் பதிவு செய்வது தொடர்பான வழக்கு விசாரணை முடிந்தது

வியாழக்கிழமை, 27 அக்டோபர் 2016      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி  - ஏர்செல்-மேக்சிஸ் வழக்கில் தி.மு.க முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதிமாறன், அவரது சகோதரர் கலாநிதிமாறன் உள்ளிட்டோர் மீது குற்றச்சாட்டுகள் பதிவு செய்வது தொடர்பான விசாரணை நிறைவடைந்ததைத் தொடர்ந்து, வழக்கு விசாரணை வரும் 3-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. தி.மு.க.வைச் சேர்ந்த தயாநிதிமாறன் மத்திய தொலைத்தொடர்புத்துறை அமைச்சராக இருந்தபோது, தனது அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தி, ஏர்செல் நிறுவனப் பங்குகளை மலேசியாவைச் சேர்ந்த மேக்சிஸ் நிறுவனத்துக்கு கட்டாயப்படுத்தி விற்கச் செய்ததாகவும்,

இதற்கு கைமாறாக சன் டி.வி. குழுமத்திற்கு மேக்சிஸ் நிறுவனத்திடம் இருந்து, 743 கோடி ரூபாய் முறைகேடாகப் பெறப்பட்டதாகவும் சி.பி.ஐ மற்றும் அமலாக்கத்துறை வழக்குகள் பதிவு செய்துள்ளன. இந்த வழக்கு டெல்லி சி.பி.ஐ சிறப்பு நீதிமன்றத்தில், நீதிபதி ஓ.பி.சைனி முன்னிலையில் நடைபெற்று வரும் நிலையில், கடந்த சில நாட்களாக குற்றச்சாட்டுகளை பதிவு செய்வதற்கான விசாரணை நடைபெற்றது. இந்த விசாரணையின்போது தயாநிதிமாறன், கலாநிதிமாறன், அவரது மனைவி காவேரி ஆஜராகியிருந்தனர். மேலும், சன் டி.வி உள்ளிட்ட நிறுவனங்களிடமும் விசாரணை நடத்தப்பட்டது. விசாரணை நிறைவு பெற்றதை அடுத்து தீர்ப்பை வரும் 3ம் தேதிக்கு நீதிபதி ஓ.பி.சைனி ஒத்திவைத்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்