முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உச்சிப்புளி கடல் பகுதியில் இறந்த நிலையில் கடல் ஆமை கரை ஒதுங்கள்.

வியாழக்கிழமை, 23 பெப்ரவரி 2017      ராமநாதபுரம்
Image Unavailable

ராமேசுவரம்,- ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளி கடலோரப்பகுதியில் இறந்த  நிலையில் 250 கிலோ மதிக்கத்தக்க கடல் ஆமை ஒன்று  வியாழக்கிழமை கரை ஒதுங்கியது.

     மன்னார் வளைகுடா கடல் பகுதியில் பாறைகளில் டால்பின், ஓங்கி மீன்,கடல்பசு,கடல்ஆமை,கடல்பன்றி,கடல் பாம்பு உள்பட நூற்றுக்காணக்கான அரியவகையான உயிரினங்கள் வாழ்ந்து வருகின்றன.இந்த வகையான உயிரினங்கள் இறை தேடி அப்பகுதியிலிருந்து வெளி வரும்போது மீன்பிடி படகுகளிலும்,கப்பல்களிலும் மோதி காயம்மடைந்து பின்னர் உயிரிழந்து கரை ஒதுங்கின்றன.இந்த நிலையில் ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளி அருகே வலங்காபுரி பகுதியில் தென் கடலோரப்பகுதியில் புதன் கிழமை இரவு இறந்த நிலையில் ஆமை ஒன்று கரை ஒதுங்கியது.  இது குறித்து அப்பகுதியிலுள்ள மீனவர்கள் மண்டபம் வனச்சரக அதிகாரிகளுக்கு தகவல் அளித்தனர்.

அதன் பேரில்   அப்பகுதிக்கு வந்த வனச்சரகர் சதீஸ் தலைமையில் வனசரகர் அலுவலர்களும், வேட்டை தடுப்பு காவலர்களும் சென்றனர்.பின்னர்  அப்பகுதியிலிருந்த கடல் ஆமை கைப்பற்றி சோதணை நடத்தினர்.இதில் இந்த கடல் ஆமை 150 செ.மீ நீளமும்,134 செ.மீ அகலமும்,268 செ.மீ சுற்றளவும், சுமார் 250 கிலோ எடையளவும் இருந்தது.இந்த கடல் ஆமை கடலில் சுமார் 125 ஆண்டுகள் வாழ்ந்து இருக்கும் எனவும்,இந்த ஆமை பெண் இனத்தை சேர்ந்தது எனவும்,பேராமை வகையை சேர்ந்தது எனவும் வனச்சரக அதிகாரிகள் தெரிவித்தனர்.அதன் பின்ன அந்த கடல் ஆமையை கால்நடை மருத்துவர்கள் சோதனை செய்ததையொட்டி அப்பகுதியிலேயே மணலில் புதைத்தனர். கடல் ஆமை இறந்து கரை ஒதுங்கியது குறித்து அப்பகுதி மீனவர்களிடம் வனச்சரக அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்