முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பின்போது திமுகவின் சூழ்ச்சிக்கு இரையாகாமல் அதிமுக எம்.எல்ஏக்கள் அமைதி காத்தோம் தங்கதமிழ்செல்வன் எம்.எல்.ஏ பேச்சு

வெள்ளிக்கிழமை, 3 மார்ச் 2017      தேனி
Image Unavailable

   தேனி - பெரியகுளத்தில் மறைந்த முன்னாள் முதல்வர் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் 69வது பிறந்தநாள்; விழாவை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு நகர அம்மா பேரவை செயலாளர் வழக்கறிஞர் சதீஸ்குமார் தலைமை தாங்கினார். மாவட்ட அவைத்தலைவர் நல்லவேலுச்சாமி, ஒன்றிய செயலாளர் அன்னபிரகாஷ், மாவட்ட பிரதிநிதி ராஜாங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இவ்விழாவில் கம்பம் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.டி.கே ஜக்கையன், பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் கதிர்காமு கூடல் மதன், தேனி மாவட்ட மீனவரணி ராமர் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். தேனி மாவட்ட செயலாளர் தங்கதமிழ்செல்வன் எம்.எல்.ஏ ஏழை எளியோருக்கு பணஉதவி, வேஷ்டி சேலை உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கி சிறப்புரையாற்றினார். அவர் பேசும்போது தமிழகத்தில் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் நல்லாட்சி தொடர வேண்டும் என்பதற்காக 32 ஆண்டுகளுக்கு பின் தொடர்ந்து இரண்டாவது முறையாக அதிமுகவை ஆட்சியில் அமர்த்தினர். புரட்சித்தலைவி அம்மா அவர்களின் மறைவுக்கு பின் முதல்வராக இருந்த ஒ.பன்னீர்செல்வம் அதிமுகவை சின்னம்மா தான் கட்டுக்கோப்பாக வழிநடத்த முடியும் என்று  அவரை பொதுச்செயலாளராக்க முன்மொழிந்தார். அதற்குபின் நடைபெற்ற சட்டமன்ற கூட்டத்தொடரில் திமுகவை சேர்ந்த துரைமுருகன் அப்போது முதல்வராக இருந்த ஒ.பன்னீர்செல்வம் அவர்களுக்கு ஆதரவு தருவதாக தெரிவித்தபோது இவர் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. இதனால் அவர் திமுக பக்கம் சாய்கிறாரோ என்ற எண்ணம் வந்ததால் பொதுச்செயலாளர் சின்னம்மாவை முதல்வராக்க அனைவரும் ஒருமித்த கருத்து தெரிவித்தோம்;. இதில் உடன்படாத ஒ.பன்னீர்செல்வம் அவர்கள் கட்சியை உடைக்க முயற்சித்தார். அவரை புரட்சித்தலைவி அம்மா அவர்களிடம் அறிமுகம் செய்து அவரை முதல்வராக தேர்ந்தெடுக்க உறுதுணையாக இருந்த சின்னம்மா, டி.டி.வி.தினகரன் ஆகியோருக்கு நம்பிக்கை துரோகம் செய்ய முயற்சித்தார்.
      ஆனால்அதில் அவரால் வெற்றி பெற முடியவில்லை. அதனை தொடர்ந்து நாங்கள் எடப்பாடி பழனிச்சாமி அவர்களை முதல்வராக தேர்ந்தெடுத்ததின்பேரில் ஆளுநர் வித்யாசாகர்ராவ் சட்டசபையில் பலத்தை நிரூபிக்க உத்தரவிட்டார். அதன் பேரில் நடைபெற்ற சிறப்பு சட்டமன்ற கூட்டத்தில் திமுகவினர் அராஜகத்தில் ஈடுபட்டனர். எங்களை சண்டைக்கு இழுத்தனர். அப்பொழுது அவர்களின் சூழ்ச்சிக்கு இரையாகாமல் அதிமுகவின் 122 எம்.எல்.ஏக்களும் அமைதி காத்ததால் இன்று புரட்சித்தலைவி அம்மாவின் ஆட்சி தொடர்கிறது. எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் முதல்வராக பதவியேற்றதும், கர்ப்பிணி பெண்களுக்கான நிதியை 12 ஆயிரத்திலிருந்து 18 ஆயிரமாக உயர்த்தியும், 500 டாஸ்மாக் கடைகளை மூடுவது, உழைக்கும் மகளிர்களுக்கு 50 சதவிகித மானியத்தில் மொபட் வாங்குவது உள்ளிட்ட 5 கோப்புகளில் கையெழுத்திட்டார்.
 இதனால் மக்களிடம் அம்மாவின் ஆட்சி தொடர்கிறது என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது என்று சிறப்புரையாற்றினார். இவ்விழாவில் நகர பொருளாளர் பொன்.ரெங்கராஜ், முன்னாள் நகர்மன்ற துணைத்தலைவர் முகுந்தன், நகர மாணவரணி செயலாளர் மருதைதுரைசெல்வம், நகர வங்கி துணைத்தலைவர் பன்னீர்செல்வம், கூட்டுறவு சங்க இயக்குநர்கள் செந்தில்குமார், குபேந்திரன், பாலன், நகர எம்.ஜி.ஆர் இளைஞரணி செயலாளர் செல்லப்பாண்டி, முன்னாள் நகர்மன்ற உறுப்பினர் ராஜாமுகமது, அண்ணா போக்குவரத்து தொழிற்சங்க உறுப்பினர் கணேசன், வார்டு செயலாளர்கள் சின்னன், மல்லீஸ்வரன் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர் மேலும் இக்கூட்டத்தில் நகர் மற்றும் ஒன்றிய பகுதிகளிலிருந்து சுமார் 2000க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இக்கூட்டத்திற்கான ஏற்பாடுகளை முன்னாள் மாவட்ட மாணவரணி செயலாளர் விஜயம்ராமசாமி ஆலோசனையின்பேரில் சிறப்பாக செய்யப்பட்டிருந்தது. முன்னதாக ஆனந்தனின் அபிகீர்த்தி நடனக்குழு சார்பில் ஆடல்பாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. 

 

 

 

 

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்