முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நீலகிரியில் இன்று தொடங்கும் 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 8822 பேர் எழுதுகின்றனர்

செவ்வாய்க்கிழமை, 7 மார்ச் 2017      நீலகிரி

தமிழகத்தில் இன்று தொடங்க உள்ள 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் நீலகிரி மாவட்டத்தில் 8822 பேர் தேர்வு எழுதுகின்றனர். இது குறித்து நீலகிரி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கணேசமூர்த்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு-

                             56 மையங்கள்

தமிழகத்தில் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் இன்று(8_ந் தேதி) தொடங்கி வரும் 30_ந் தேதி வரை நடைபெறுகிறது. இதில் நீலகிரி மாவட்டத்தில் இத்தேர்வினை எழுத 56 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இத்தேர்வில் 4297 மாணவர்களும், 4525 மாணவியர்களும் என மொத்தம் 8822 பேர் தேர்வெழுதுகின்றனர். இத்தேர்வானது குன்னூர் கல்வி மாவட்டத்தில் 38, கூடலூர் கல்வி மாவட்டத்தில் 18 என மொத்தம் 56 தேர்வு  மையங்களில் நடைபெறுகிறது. இத்தேர்வுப் பணியில் 56 முதன்மைக் கண்காணிப்பாள்கள், 56 துறை அலுவலர்கள், 112 அலுவலக பணியாளர்கள், பறக்கும்படை உறுப்பினர்கள் 103 பேர், அறைக் கண்காணிப்பாளர்கள் 557 பேர், வினாத்தாள் கொண்டு செல்ல வழித்தட அலுவலர்கள் 23 பேர் என மொத்தம் 927 ஆசிரியர்கள் இப்பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

               

தேர்வு மையங்களில் மாணவர்கள் ஒழுங்கீனச்செயல்களில் ஈடுபடுவதைத் தவிர்க்கும் பொருட்டு பறக்கும்படை உறுப்பினர்கள் 103 பேர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். தேர்வு மையங்களில் மாணவர்களுக்கு போதிய கழிப்பறை, குடிநீர் வசதிகள் செய்யப்பட்டுள்ளன. மாணவர்கள் உரிய நேரத்தில் தேர்வு மையங்களைச் சென்றடைய போதுமான போக்குவரத்து வசதிகள் செய்யப்பட்டுள்ளன. மாற்றத்திறனாளி மாணவர்களுக்கு சொல்லி எழுதுபவர், மொழிப்பாட விலக்கு, தேர்வு எழுத கூட ஒரு மணி நேரம் ஆகிய சலுகைகள் தேர்வுத்துறையால் வழங்கப்பட்டுள்ளது. அத்துடன் தரைத்தளத்திலேயே தேர்வறைகள் தனியே ஒதுக்கப்பட்டுள்ளது.

                                                தனித்தேர்வர்கள்

தனித்தேர்வர்கள் குன்னூரில் புனித மரியன்னை பெண்கள்  மேல்நிலைப்பள்ளியிலும், கூடலூரில் புனித தாமஸ் பெண்கள் மேல்நிலைப்பள்ளியிலும் தேர்வெழுகின்றனர். இத்தகவலை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கணேசமூர்த்தி தெரிவித்துள்ளார்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்