முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜாதவுக்கு வழங்கிய தூக்குத்தண்டனையை உடனடியாக சஸ்பெண்ட் செய்ய வேண்டும்: சர்வதேச கோர்ட்டில் இந்தியா வாதம்

திங்கட்கிழமை, 15 மே 2017      உலகம்
Image Unavailable

ஜெனீவா,  இந்திய கடற்படை முன்னாள் அதிகாரி ஜாதவுக்கு பாகிஸ்தான் அளித்துள்ள தூக்குத்தண்டனையை உடனடியாக சஸ்பெண்ட் செய்ய வேண்டும் என்று சர்வதேச கோர்ட்டில் இந்தியா தரப்பில் எடுத்துரைக்கப்பட்டது.

இந்தியாவை சேர்ந்த முன்னாள் கடற்படை அதிகாரி குல்புஷன் ஜாதவ், ஈராக்கிற்கு சென்றிருந்தார். இதை அறிந்த பாகிஸ்தான் உளவு பிரிவினர் ஜாதவை பாகிஸ்தானுக்கு கடத்திச் சென்று சிறையில் அடைத்தனர். பின்னர் ஜாதவுக்கு பாகிஸ்தான் ராணுவ கோர்ட்டு தூக்குத்தண்டனை விதித்துள்ளது. இதற்கு இந்தியா கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று பாகிஸ்தானை எச்சரித்துள்ளது. மேலும் தூதரக ரீதியாக பிரச்சினையை அணுக பாகிஸ்தான் தொடர்ந்து மறுத்து வருகிறது.

இதனையடுத்து இந்த விவகாரத்தை சர்வதேச கோர்ட்டிற்கு இந்தியா கொண்டு சென்றுள்ளது. இதுகுறித்த விசாரணை நேற்று சர்வதேச கோர்ட்டில் நடைபெற்றது. அப்போது ஜாதவுக்கு விதிக்கப்பட்டுள்ள தூக்குத்தண்டனையை பாகிஸ்தான் உடனடியாக சஸ்பெண்ட் செய்ய வேண்டும். இதுவரை 30-க்கும் மேற்பட்ட தடவை தூதரக ரீதியாக பாகிஸ்தான் அரசை தொடர்புகோள்ள இந்தியா முயற்சி செய்தது. இதை பாகிஸ்தான் நிராகரித்துவிட்டது. இது சர்வதேச விதிமுறைகளுக்கு மாறானது. ஜெனீவா ஒப்பந்தத்தை மீறுவதாகும் என்றும் இந்தியா தரப்பில் எடுத்துரைக்கப்பட்டது. மனிதாபிமான முறையில் நடத்தப்பட வேண்டிய அனைத்து அடிப்படை விதிமுறைகளையும் பாகிஸ்தான் மீறிவிட்டது. தூதரக ரீதியாக பிரச்சினைக்கு தீர்வுகாண கூறிவந்தது செவிடன் காதில் சங்கு ஊதிய கதையாக இருக்கிறது. தற்போது சூழ்நிலை மிகவும் மோசமாக போய்விட்டது. அதனால்தான் சர்வதேச கோர்ட்டில் நீதி கேட்டு இந்தியா வந்துள்ளது என்று இந்தியா சார்பாக ஆஜராகி வாதாடிய ஹரீஷ் சால்வே எடுத்துரைத்தார்.

பாகிஸ்தான் தரப்பிலும் வாதாடப்பட்டது. இருதரப்பினருக்கும் தலா 90 நிமிட நேரம் கொடுக்கப்பட்டது. பின்னர் இந்த 90 நிமிடங்களுக்கு மேலாக கொஞ்ச நேரத்தை இந்தியா எடுத்துக்கொள்ளலாம் என்று சர்வதேச கோர்ட்டு நீதிபதி முதன் முதலாக அனுமதி கொடுத்தார்.

இந்திய கடற்படையில் பணியாற்றிய ஜாதவ் வியாபாரம் தொடர்பாக ஈரானுக்கு சென்றிருந்தார். அவரை பாகிஸ்தான் உளவு படையினர் கடத்தி கொண்டு சென்று அவர் மீது நாசவேலை மற்றும் உளவு பார்த்ததாக குற்றஞ்சாட்டி வழக்கு தொடர்ந்தது. வழக்கை சரியாக விசாரிக்காத பாகிஸ்தான் ராணுவ கோர்ட்டு ஜாதவுக்கு தூக்குத்தண்டனையை விதித்தது என்று இந்திய தரப்பில் கூறப்பட்டது. இந்திய கடற்படையில் ஜாதவ் பணியாற்றியது உண்மைதான் என்றும் வியாபாரம் தொடர்பாக ஈரானுக்கு சென்றிருந்தார் என்றும் இந்தியா தரப்பில் எடுத்துரைக்கப்பட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்