முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காணும் பொங்கலையொட்டி சிறப்பு பேருந்துகள் இயக்கம்

திங்கட்கிழமை, 15 ஜனவரி 2018      தமிழகம்
Image Unavailable

சென்னை : காணும் பொங்கலை முன்னிட்டு சென்னை நகரின் முக்கிய இடங்களை காண வரும் பொதுமக்களின் வசதிக்காக சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று மாநகர போக்குவரத்துக்கழகம் அறிவித்துள்ளது.

இது குறித்து வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு வருமாறு:-

2018 காணும் பொங்கலை முன்னிட்டு இன்று சென்னை நகரின் முக்கிய இடங்களை காண வரும் பொதுமக்கள் வசதிக்காக அண்ணாசதுக்கம், வண்டலூர் உயிரியல் பூங்கா, கோவளம், மாமல்லபுரம், கிஷ்கிந்தா, குயின்ஸ்லேண்ட், பெசன்ட் நகர், பிராட்வே, தாம்பரம், திருவான்மியூர் மற்றும் சுற்றுலாப் பொருட்காட்சி நடைபெறும் தீவுத்திடல் ஆகிய இடங்களுக்கும் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. பொதுமக்களின் வசதியை கருத்திற்கொண்டு இச்சிறப்புப் பேருந்துகள் டோல்கேட், ஆவடி, அய்யப்பன்தாங்கல், அடையார், காரனோடை, பெரும்பாக்கம், கேளம்பாக்கம், கண்ணகிநகர், ரெட்ஹில்ஸ், கண்ணதாசன் நகர், கோயம்பேடு, பூவிருந்தவல்லி, வடபழனி, அய்யனாவரம், பெரம்பூர், வில்லிவாக்கம், சுங்குவார்சத்திரம், நடுவீரப்பட்டு, ஈஞ்சம்பாக்கம், திருப்போரூர், செங்கல்பட்டு, மாதாவரம், பட்டாபிராம், கே.கே.நகர், அம்பத்தூர், கிண்டி, தி.நகர் ஆகிய இடங்களிலிருந்து இயக்கப்படும்.

மேலும், பொங்கல் பண்டிகையை முடித்து சென்னை திரும்பும் தென்மாவட்ட பொதுமக்களின் வசதிக்காக 17-ம் தேதி அதிகாலை 3.30 மணி முதல் சென்னை புறநகர்பேருந்து நிலையம், பெருங்களத்தூர் மற்றும் சென்ட்ரல் இரயில் நிலையம் ஆகிய இடங்களிலிருந்து பேருந்துகள் இயக்கப்படும்.  இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து