முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

16 பாலஸ்தீனர்கள் பலி குறித்த விசாரணைக்கு ஐ.நா. கோரிக்கை

ஞாயிற்றுக்கிழமை, 1 ஏப்ரல் 2018      உலகம்
Image Unavailable

நியூயார்க்: இஸ்ரேல் ராணுவத்துடனான மோதலில் 16 பாலஸ்தீனர்கள் உயிரிழந்தது தொடர்பாக பாரபட்டமற்ற விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று ஐ.நா. பொதுச் செயலர் அன்டோனியோ குட்டெரஸ் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து தனது செய்தித் தொடர்பாளர் மூலம் அவர் கூறியதாவது,
இஸ்ரேல் - பாலஸ்தீன எல்லையில் நடைபெறும் ஆர்ப்பாட்ட ஊர்வலத்தின் போது ஏற்படும் வன்முறைச் சம்பவங்களும், அதனால் ஏற்படும் உயிரிழப்புகளும் வேதனை அளிக்கின்றன. இந்தச் சம்பவங்களால் இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்துக்கும் இடையிலான பதற்றம் மேலும் அதிகரிக்கும் என்ற கவலை ஏற்பட்டுள்ளது. பாலஸ்தீனர்களின் உயிரிழப்பு குறித்து, பாரபட்சமற்ற, வெளிப்படை தன்மை வாய்ந்த விசாரணை நடத்தப்பட வேண்டும்.

பாலஸ்தீன பிரச்னைக்கு அமைதித் தீர்வு காண்பதற்கான முன்முயற்சிகளை புதிய உத்வேகத்துடன் மேற்கொள்ள ஐ.நா. தயாராக இருக்கிறது என்றார் அவர்.

கடந்த 1976-ம் ஆண்டில் யூதக் குடியேற்றத்தை எதிர்த்த 6 பாலஸ்தீனர்கள் இஸ்ரேல் படையினரால் கொல்லப்பட்ட தினத்தை, உலகம் முழுவதுமுள்ள பாலஸ்தீனர்கள் நில தினமாக கடைப்பிடித்து வருகின்றனர்.

இந்த நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை கடைப்பிடிக்கப்பட்ட 42-வது நில தினத்தையொட்டி, நில மீட்புக்கான மாபெரும் ஆர்ப்பாட்ட ஊர்வலத்தில் பங்கேற்குமாறு ஹமாஸ் உள்ளிட்ட பாலஸ்தீன அமைப்புகள் அழைப்பு விடுத்திருந்தன. இந்த அழைப்பை ஏற்று, ஆயிரக்கணக்கானவர்கள் இஸ்ரேல் எல்லையிலுள்ள தடுப்பு வேலி வரை வந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அந்த ஆர்ப்பாட்டம் அமைதியான முறையில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தாலும், அதில் பங்கேற்ற சிலர் தடுப்பு வேலியைத் தாண்டி அத்துமீற முயன்றதாகக் கூறப்படுகிறது.

இதையடுத்து, இஸ்ரேல் படையினர் அவர்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். மேலும், தங்கள் வீரர்கள் மீது துப்பாக்கித் தாக்குதல் நிகழ்த்த முயற்சித்ததாகக் கூறி, சில எல்லைப் பகுதிகளில் இஸ்ரேல் ராணுவம் பீரங்கித் தாக்குதல் நிகழ்த்தியது.

மேலும், ரப்பர் குண்டுகள், கண்ணீர் புகை குண்டுகள் ஆகியவற்றையும் பாலஸ்தீனர்களை நோக்கி இஸ்ரேல் படையினர் வீசினர். இதில், கடந்த 2 நாள்களில் மட்டும் 16 பாலஸ்தீனர்கள் உயிரிழந்தனர்; நூற்றுக்கணக்கானவர்கள் காயமடைந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து