முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கானொலி தொலைக்காட்சி மூலமாக 4 போக்குவத்து அலுவலகங்கள் -ஜெயலலிதா திறந்து வைத்தார்

சனிக்கிழமை, 7 ஜனவரி 2012      தமிழகம்
Image Unavailable

 

சென்னை,ஜன.- 6 - தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா நேற்று (6.1.2012) தலைமைச் செயலகத்தில், போக்குவரத்துத் துறையில் 4 கோடியே 50 லட்சத்து 26 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள 4 போக்குவரத்து அலுவலகக் கட்டடங்கள் மற்றும் 2 ஓட்டுநர் தேர்வுத் தளங்கள் ஆகியவற்றை காணொலிக் காட்சி மூலமாக திறந்து வைத்தார். போக்குவரத்துத் துறையில் தற்போதுள்ள 11 சரக அலுவலகங்கள், 63 வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்கள், 50 பகுதி அலுவலகங்கள் மற்றும் 19 சோதனை சாவடி அலுவலகங்கள், ஆக மொத்தம் 143 அலுவலகங்களில், 49 அலுவலகங்கள் சொந்தக் கட்டடத்தில் இயங்கி வருகின்றன.   தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா, மக்கள் சேவையைக் கருத்தில் கொண்டு, மக்களுக்குப் பயன்படும் வகையில் நவீன வசதிகளுடன் கூடிய போக்குவரத்து அலுவலகங்கள் உருவாக்க வேண்டும் என்ற உயரிய நோக்கத்துடன், வாடகைக் கட்டடங்களில் இயங்கி வரும் அலுவலகங்களை படிப்படியாக அரசு சொந்தக் கட்டடத்தில் இயங்க நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். அந்த வகையில், வேலூர் மாவட்டம், இராணிப்பேட்டை வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்திற்கு 1 கோடியே 63 லட்சத்து 11 ஆயிரம் ரூபாய் செலவில் புதிய கட்டடம் மற்றும் ஓட்டுநர் தேர்வுத் தளம், வாணியம்பாடி பகுதி அலுவலகத்திற்கு 36 லட்சம் ரூபாய் செலவில் ஓட்டுநர் தேர்வுத் தளம், காஞ்சிபுரம் மாவட்டம், செங்கல்பட்டு வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்திற்கு 1 கோடியே 49 லட்சத்து 15 ஆயிரம் ரூபாய் செலவில் புதிய கட்டடம், விருதுநகர் மாவட்டம், விருதுநகரில் துணைப் போக்குவரத்து ஆணையர் அலுவலகத்திற்கு 49 லட்சத்து 83 ஆயிரம் ரூபாய் செலவில் புதிய கட்டடம் மற்றும் நாமக்கல் மாவட்டம், இராசிபுரம் பகுதி அலுவலகத்திற்கு 52 லட்சத்து 17 ஆயிரம் ரூபாய் செலவில் புதிய கட்டடம், என மொத்தம் நான்கு கட்டடங்கள் மற்றும் இரண்டு ஓட்டுநர் தேர்வுத் தளங்கள் 4 கோடியே 50 லட்சத்து 26 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ளன. மக்கள் நலன் கருதி புதியதாகக் கட்டப்பட்டுள்ள வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்கள் மற்றும் ஓட்டுநர் தேர்வுத் தளங்களை  தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா நேற்று தலைமைச் செயலகத்தில் காணொலிக் காட்சி மூலமாக திறந்து வைத்தார். வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தை தமிழக முதலமைச்சர் திறந்து வைத்தமைக்காக சந்தியா நன்றி தெரிவித்து பேசியதாவது:​தமிழக முதலமைச்சருக்கு என் பணிவான வணக்கம்.  நான் ஆற்காட்டிலிருந்து வருகிறேன்.  நான் இங்கு பழகுனர் உரிமம் பெறுவதற்காக வந்துள்ளேன்.  இந்த வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளதால் அனைத்து மக்களும் பயன்பெறும் வகையில் அமைந்துள்ளது.  மேலும் இந்த கட்டடத்திற்குள் நுழையும் போது எங்களுடைய தேவைகளை எப்படி சுலபமாக nullர்த்தி செய்வது என்பதைப் பற்றி மிகவும் தெளிவான வழிமுறைகள் எழுதி ஓட்டப்பட்டிருப்பது எங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமைந்துள்ளது.  இவ்வாறு மக்களுக்காக எளிய முறையில் பயனுள்ள சேவை செய்த தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்நிகழ்வின்போது,  போக்குவரத்துத் துறை அமைச்சர், தலைமைச் செயலாளர், உள்துறை முதன்மைச் செயலாளர், போக்குவரத்துத் துறை ஆணையர் மற்றும் உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்