முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கோடை விடுமுறையை பயன்படுத்தி ஆம்னி பஸ்களில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் எச்சரிக்கை

சனிக்கிழமை, 12 மே 2018      தமிழகம்
Image Unavailable

கரூர்: கோடை விடுமுறையை பயன்படுத்தி ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாநில போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் எச்சரித்தார்.

கரூர் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் கணினிமயமாக்கப்பட்ட ஓட்டுநர் தேர்வு தளத்தை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் துவக்கி வைத்தார்.

அப்போது  அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது,
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உயிரோடு இருந்த போதே தமிழகத்தில் 14 இடங்களில் கணினிமயமாக்கப்பட்ட ஓட்டுநர் தேர்வுதளம் அமைக்க உத்தரவிட்டிருந்தார். அதன்படி, கணினிமயமாக்கப்பட்ட ஓட்டுநர் தேர்வுதளம் (ஆட்டோமேட்டிக் டெஸ்டிங் டிராக்) தமிழகத்தில் முதன் முறையாக கரூரில் ரூ.40 லட்சம் செலவில் திறக்கப்பட்டுள்ளது. இதன் நோக்கம் சாலை விபத்துகளை குறைப்பது, பயிற்சியின் போது ஓட்டுநர் தவறு செய்தால் ஓடுதளத்தில் உள்ள கேமிரா மூலம் கணினியில் காண்பித்து விடுவதால் தேர்ச்சி பெற முடியாது. இதன்மூலம் ஓட்டுநரின் திறன் அதிகரிக்கப்படும். ஒரு சில மாநிலங்களில் இந்த ஓடுதளம் இருக்கிறது என்றாலும் இந்தியாவிலேயே கரூரில் தான் நவீன முறையில் செயல்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஓடுதளத்திற்கான மென்பொருளை உருவாக்கியவர்கள் கரூர் எம்.குமாரசாமி பொறியியல் கல்லூரி மாணவர்கள். நமது இலக்கான 2020க்குள் சாலை விபத்துகளை பாதியாக குறைக்க முயற்சி மேற்கொண்டுள்ளோம். இதன் ஒரு கட்டமாக இந்த தேர்வு தளத்தை திறந்து வைத்துள்ளோம்.

வாகனங்கள் பெருகிவரும் காலத்தில் ஓட்டுநரின் பயிற்சி மிகவும் முக்கியம். கோடை விடுமுறையைப் பயன்படுத்தி ஆம்னி பேருந்துகளில் அதிகக் கட்டணம் வசூலிக்கக் கூடாது என பேருந்து உரிமையாளர்களிடம் எடுத்துரைக்கப்பட்டிருக்கிறது. அதிக கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கப்பட்டிருப்பதால், தவறு நடக்க வாய்ப்பில்லை . அதிகக் கட்டணம் வசூலிப்பது தொடர்பாக புகார் தந்தால் போக்குவரத்துத் துறை அதிகாரிகள் மூலம் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து