முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

10-ம் வகுப்பு சிறப்பு துணைத்தேர்வு: நாளை முதல் ஹால்டிக்கெட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்

செவ்வாய்க்கிழமை, 19 ஜூன் 2018      தமிழகம்
Image Unavailable

சென்னை : பத்தாம் வகுப்பு சிறப்பு துணைத்தேர்வு எழுத விண்ணப்பித்த அனைத்து தனித்தேர்வர்களும் நாளை முதல் ஹால்டிக்கெட்டுகளை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று தேர்வுத்துறை இயக்குனர் வசுந்தராதேவி அறிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு வருமாறு:-
பதிவிறக்கம்...

நடைபெறவுள்ள ஜூன், ஜூலை 2018 பத்தாம் வகுப்பு சிறப்பு துணைப் பொதுத் தேர்வெழுத அரசுத் தேர்வுத் துறையால் அறிவிக்கப்பட்ட நாட்களில் விண்ணப்பித்த அனைத்து தனித்தேர்வர்களும் (தட்கல் உட்பட) 21-ம் தேதி முதல் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தின் மூலம் தேர்வுக் கூட அனுமதிச் சீட்டுகளை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். www.dge.tn.gov.inஎன்ற இணையதளத்திற்குச் சென்று SSLCJUNE|JULY 2018 EXAMINATIOIN - HALL TICKETDOWNLOAD என்ற வாசகத்தினை click செய்து தோன்றும் பக்கத்தில் தங்களது மார்ச் 2018 தேர்வின் பதிவெண் மற்றும் பிறந்த தேதியினைப் ( date of birth ) பதிவு செய்தால் அவர்களுடைய தேர்வுக் கூட அனுமதிச் சீட்டு திரையில் தோன்றும். அதனைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

தேர்வெழுதலாம்...

மார்ச் 2018 பத்தாம் வகுப்பு அறிவியல் பாட செய்முறைத் தேர்வுக்கு வருகை புரியாதோர் மற்றும் அறிவியல் பாடத்தில், செய்முறைத் தேர்வில் 25 மதிப்பெண்களில் தேர்ச்சிக்கான குறைந்த பட்ச மதிப்பெண் 15-க்கு குறைவாக பெற்று தேர்ச்சி அடையாதவர்கள், நடைபெறவுள்ள ஜூன் / ஜூலை 2018 சிறப்பு துணைப் பொதுத்தேர்வு அறிவியல் பாட செய்முறைத் தேர்வெழுத வேண்டும். அறிவியல் பாடத்தில் கருத்தியல், செய்முறை என எந்தப் பகுதியில் தோல்வியடைந்தாலும், அந்தப் பகுதியை மட்டும் தேர்வர்கள் தேர்வெழுதலாம் என்ற விவரம் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.

செய்முறைத் தேர்வு

செய்முறைத் தேர்வெழுத வேண்டிய தனித்தேர்வர்களுக்குத் தேர்வுக் கூடஅனுமதி சீட்டில் அறிவிக்கப்பட்ட தேர்வு மையத்திலேயே 25-ம் தேதி மற்றும் 26-ம் தேதி ஆகிய இரு நாட்களில் செய்முறைத் தேர்வு நடத்தப்படும். எனவே, இத்தேர்வர்கள் உரிய தேர்வு மைய தலைமையாசிரியரை மேற்படி நாட்களில் அவசியம் அணுகுமாறு கண்டிப்பாக அறிவுறுத்தப்படுகிறார்கள். உரிய தேர்வுக் கூட அனுமதிச் சீட்டின்றி எந்த ஒரு தேர்வரும் தேர்வெழுத அனுமதிக்கப்பட மாட்டார்கள்.  இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து