முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நாளை நமதே, நாற்பதும் நமதே என்ற தாரக மந்திரத்துடன் அ.தி.மு.க.வின் வெற்றிக்கு பாடுபட வேண்டும் அமைச்சர் செல்லூர் கே.ராஜு பேச்சு

திங்கட்கிழமை, 20 ஆகஸ்ட் 2018      தமிழகம்
Image Unavailable

மதுரை,நாளை நமதே, நாற்பதும் நமதே என்ற தாரக மந்திரத்துடன் அ.தி.மு.க. அரசின் சாதனைகளை எடுத்துரைத்து கழக வெற்றிக்கு இப்போதே நாம் அயராது பாடுபட வேண்டும் என்று அமைச்சர் செல்லூர் ராஜூ பேசினார்.

மதுரை மாநகர் மாவட்ட இளைஞரணி சார்பில் தெற்கு 3-ம் பகுதியில் உள்ள தினமணி தியேட்டர் அருகே மாபெரும் உறுப்பினர் சேர்க்கும் முகாம் மாவட்ட இளைஞரணி செயலாளர் சோலைராஜா தலைமையில் நடைபெற்றது.

இந்த உறுப்பினர் முகாமை மதுரை மாநகர் மாவட்ட செயலாளரும், கூட்டுறவுத்துறை அமைச்சருமான செல்லூர் கே.ராஜு துவக்கி வைத்து சிறப்புரை ஆற்றினார்.

இந்நிகழ்ச்சியில் இளைஞரணி இணைச்செயலாளர் கிரம்மர் சுரேஷ், மாவட்ட இளைஞரணி துணைச்செயலாளர் ஜி.என்.அன்புசெழியன்,

மாவட்ட கழக அவைத்தலைவர் புதூர் துரைப்பாண்டி, மாவட்ட கழக துணைச் செயலாளர் சி. தங்கம், மாவட்ட கழக பொருளாளர் ஜெ.ராஜா,

அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்ற துணைச்செயலாளர் எம்.எஸ்.பாண்டியன், முன்னாள் துணை மேயர் கு.திரவியம்,  செயற்குழு உறுப்பினர் சண்முகவள்ளி, தகவல் தொழில் நுட்ப பிரிவு செயலாளர் மாணிக்கம், பகுதி செயலாளர்கள் பூமிபாலகன், தளபதி மாரியப்பன்,

மற்றும் இளைஞரணி நிர்வாகிகள் பார்த்திபன், சரவணன், செந்தில் குமார், பரமேஸ்வரன், சசிக்குமார், விஜயகுமார், கலைச் செல்வம், உல்லாச கார்த்திக், மற்றும் நாகராஜன், மலைச்சாமி, பாலகிருஷ்ணன், குமார், முக்கூரான், பாண்டி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இந்த முகாமினை துவக்கி வைத்த அமைச்சர் செல்லூர் கே.ராஜு பேசியதாவது:-

எம்.ஜி.ஆர். இந்த இயக்கத்தை தோற்றுவிக்கும் போது மக்களுக்கு உண்மையாக உழைத்து தொண்டு செய்ய வேண்டும்.

அது மட்டுமல்லாது இந்த இயக்கத்திற்கு விசுவாசமாகவும் இருந்து பணியாற்ற வேண்டும் என்று கூறினார்.

அதன்படி இன்று புதிதாக இணைந்திருக்கும் இளைஞர்களாகிய நீங்கள் மக்கள் பணியாற்றி பொதுமக்களுக்கு சேவை செய்ய வேண்டும் அப்போது தான் மக்களின் மதிப்பை நீங்கள் பெற்று பொதுவாழ்வில் முன்னேற்றம் அடைவீர்கள்.

இளைஞர்கள் ஆதரவு இருந்தால் தான் இனி வரும் காலங்களில் வெற்றி பெற முடியும் என்ற சூழ்நிலை உருவாகி உள்ளது. இந்த இயக்கம் இன்னும் 100 ஆண்டுகள் மக்கள் பணியாற்ற வேண்டும் என்று உங்களை மனதில் வைத்துத்தான் சட்டமன்றத்தில் தனது இறுதி உரையாக அம்மா பேசினார்.

இளைஞர்களுக்காக திட்டங்களை தந்தவர்  அம்மா.  எந்த நாட்டிலும் இல்லாத வகையில் மாணவர்களுக்கு மடிக்கணிணி வழங்கி உங்களின் திறமைகளை பார் போற்றும் அளவில் அறிய வைத்தார்.

அது மட்டுமல்லாது இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கும் வண்ணம் சென்னையில் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை நடத்தி அதன் மூலம் புதிய தொழிற்சாலைகளை உருவாக்கி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை பெற்றுத் தந்தார்.


தற்போது அம்மா வழியில் செயல்பட்டு வரும் முதல்வரும், துணை முதல்வரும் இளைஞர்கள் மீது பற்றும் பாசமும் வைத்துள்ளனர். அதனால் தான் இளைஞர்களுக்கு அம்மா வழியில் திட்டங்களை வழங்கி வருவது மட்டுமல்லாது, வரும் ஜனவரி மாதத்தில் மீண்டும் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை நடத்தி அதன் மூலம் தமிழகத்திற்கு தொழிற்சாலைகளை உருவாக்கி இளைஞர்களுக்கு ஒரு முன்னேற்றப்பாதைக்கு அழைத்துச் செல்ல திட்டமிட்டுள்ளனர்.

நமது கழக பணி என்பது ஒரு சிறந்த பணி. ஆனால் மற்ற இயக்கங்களை எடுத்துக் கொண்டால் வாரிசு அரசியல் நடத்திக் கொண்டு இளைஞர்களை தவறான பாதையில் அழைத்துச் செல்வார்கள். இந்த இயக்கம் ஆரம்பித்து 46 ஆண்டுகள் ஆகின்றது. இதில் கழகம்  28 ஆண்டுகாலம் மக்கள் பணியாற்றி வருகிறது. 28 ஆண்டுகள் இந்தியாவிலேயே எந்த இயக்கமும் இது போன்று ஆட்சி செய்தது கிடையாது.

எம்.ஜி.ஆர். இருந்த போது 16 லட்சம் தொண்டர்கள் தான் இருந்தார்கள். ஆனால் அம்மா ஒன்றரை கோடி தொண்டர்களை உருவாக்கி மாபெரும் இயக்கமாக உருவாக்கி காட்டினார். தற்போது முதலமைச்சரும், துணை முதலமைச்சரும், 2 கோடி உறுப்பினர்கள் கொண்ட மாபெரும் இயக்கமாக மாற்ற பல்வேறு திட்டங்களை தீட்டி வருகின்றனர்.

அதன்படி தற்போது தீவிர உறுப்பினர் சேர்க்கை நடைபெற்று வருகிறது.

  நாளை நமதே, நாற்பதும் நமதே என்ற தாரக மந்திரத்துடன் இப்போதே நாம் தேர்தல் களத்தில் அ.தி.மு.க. அரசின் சாதனைகளை எடுத்துரைத்து கழக வெற்றிக்கு நீங்கள் அயராது பாடுபட வேண்டும். உங்கள் உழைப்புக்கு முதல்வரும், துணை முதல்வரும் ஒரு உயரிய அந்தஸ்தை உங்களுக்கு வழங்குவார்கள். இவ்வாறு அவர் பேசினார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து