முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ராசா குற்றவாளி என்று காங்கிரஸ் கூறவில்லை: அபிஷேக்

புதன்கிழமை, 8 பெப்ரவரி 2012      ஊழல்
Image Unavailable

 

புது டெல்லி, பிப்.8 - 2 ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலில் முன்னாள் தி.மு.க அமைச்சர் ராசா கைது செய்யப்பட்டு ஒரு வருடத்திற்கும் மேலாக திகார் சிறையில் இருந்து வருகிறார். இந்த நிலையில் மத்திய அமைச்சர் சிதம்பரத்திற்கும் இந்த முறைகேடுகளில் சம்பந்தம் உண்டு என்றும் அவரையும் விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் என்றும் சுப்பிரமணிய சுவாமி வழக்கு தொடுத்திருந்தார். 

இது குறித்து சி.பி.ஐ. கோர்ட் வழங்கிய தீர்ப்பில் சிதம்பரத்திடம் கோர்ட் விசாரணை நடத்த வேண்டிய அவசியமில்லை என்று தீர்ப்பு வழங்கியது. இது குறித்து கருத்து சொன்ன காங்கிரஸ் தலைவர்கள் ராசா போன்று சிதம்பரத்தின் மீது கூறப்படும் குற்றச்சாட்டுக்கு எந்தவித ஆதாரமும் இல்லை என்றார்கள். இதனால் தி.மு.க வட்டாரத்திற்கு காங்கிரஸ் மீது அதிருப்தி ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதற்கு விளக்கமளிக்கும் வகையில் காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் அபிஷேக் சிங்வி டெல்லியில் நிருபர்களிடம் கூறியதாவது, 

2 ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலில் ராசா ஊழல் செய்தார் என்று காங்கிரஸ் கூறவில்லை. அவர் செய்த தவறுக்குத்தான் தண்டனை அனுபவிக்கிறார் என்றும் நாங்கள் குறிப்பிட்டு சொல்லவில்லை. காங்கிரசை பொறுத்தவரை ராசா குற்றவாளியல்ல. அவர் குற்றம் சாட்டப்பட்டிருக்கிறார். அவ்வளவுதான். இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்