முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மே.இ.தீவுக்கு எதிரான முதல் டெஸ்ட்: இந்தியா முதல் இன்னிங்சில் 649 ரன்கள் குவித்து டிக்ளேர்: கோலி, ஜடேஜா அபார சதம்

வெள்ளிக்கிழமை, 5 அக்டோபர் 2018      விளையாட்டு
Image Unavailable

Source: provided

ராஜ்கோட் : ராஜ்கோட்டில் நடைபெற்று வரும் வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான ஆட்டத்தில் ஜடேஜா சதத்தால் இந்தியா 649 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்துள்ளது
இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் ராஜ்கோட்டில் நடைபெற்று வருகிறது. அறிமுக வீரர் பிரித்வி ஷா சதத்தால் இந்தியா முதல் நாள் ஆட்டத்தில் 4 விக்கெட் இழப்பிற்கு 364 ரன்கள் குவித்தது. விராட் கோலி 72 ரன்னுடனும், ரிஷப் பந்த் 17 ரன்னுடனும் களத்தில் நின்றிருந்தனர்.

24-வது சதம்

நேற்று 2-வது நாள் ஆட்டம் தொடங்கியது. விராட் கோலி சிறப்பாக விளையாடி தனது 24-வது சதத்தை பூர்த்தி செய்தார். மறுமுனையில் ரிஷப் பந்த் வாணவேடிக்கை நிகழ்த்தினார். சதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட ரிஷப் பந்த் 84 பந்தில் 92 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த ஜடேஜா தனது சொந்த மைதானத்தில் ஆதிரடியை வெளிப்படுத்தினார். விராட் கோலி (139), அஸ்வின் (7), குல்தீப் யாதவ் (12), உமேஷ் யாதவ் (22) ஆதரவு கொடுக்க ஜடேஜா 128 பந்தில் 99 ரன்னை தொட்டார். 150-வது ஓவரின் 4-வது பந்தில் ஒரு ரன் எடுத்து தனது முதல் சதத்தை அடித்தார் ஜடேஜா.

649 ரன்கள்...

149.5 ஓவரில் இந்தியா 9 விக்கெட் இழப்பிற்கு 649 ரன்கள் குவித்திருக்கும்போது முதல் இன்னிங்சை டிக்ளேர் செய்தது. ஜடேஜா 100 ரன்னுடனும், முகமது ஷமி 2 ரன்னுடனும் களத்தில் இருந்தனர். வெஸ்ட் இண்டீஸ் அணி சார்பில் தேவேந்திர பிஷூ அதிகபட்சமாக நான்கு விக்கெட்டுக்கள் வீழ்த்தினார்.  மேற்கிந்திய தீவுகள் அணி தரப்பில் பிஷூ 4 விக்கெட்கள் சாய்த்தார். பின்னர், தனது முதல் இன்னிங்சை தொடங்கி விளையாடி வரும் மேற்கிந்திய தீவுகள் அணி 7 ரன்கள் எடுப்பதற்குள் இரண்டு விக்கெட்களை இழந்துள்ளது. முகமது சமி இரண்டு விக்கெட்களை சாய்த்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து