முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

கேரமல் புட்டிங்

Cooking time in minutes: 
20
Ingredients: 

கேரமல் புட்டிங் செய்யத் தேவையான பொருள்கள்;

  1. பால் - 1 கிளாஸ். 
  2. ரவை - 3 ஸ்பூன்.
  3. சர்க்கரை - 7 ஸ்பூன்.
  4. நெய் - 1 ஸ்பூன்.
  5. ஏலக்காய் பொடி - தேவையான அளவு.
  6. கலக்கிவைத்த முட்டை - 2.
Method: 

செய்முறை ;

  1. ஒரு பாத்திரத்தில் ஒரு ஸ்பூன் நெய் ஊற்றி பாத்திரத்தின் அனைத்து பகுதிகளிலும் படும் படி நன்றாக தடவி தயார் செய்து வைத்துக்கொள்ளவும்.
  2. அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து ஒரு கிளாஸ் பாலை ஊற்றி கொதிக்க வைக்கவும்.
  3. பால் சூடானவுடன் அடுப்பின் தனலை குறைத்து 4 ஸ்பூன் சர்க்கரையை போட்டு கலந்து விடவும்.
  4. தேவையான அளவு ஏலக்காய் பொடியை போட்டு கலந்து விடவும்.
  5. இதில் 3 ஸ்பூன் ரவையை சிறிது சிறிதாக போட்டு கலந்து விடவும்,கட்டி காட்டாமலும்,அடிப்பிடக்காமலும் இருக்க குறைவான தணலில் செரிலாக் பதம் வரும் வரை கிளறி விட்டுஅடுப்பில் இருந்து  இறக்கி ,சிறிது நேரம் ஆற வைக்கவும்.
  6. அடுப்பில் கடாய் வைத்து 3 ஸ்பூன் சர்க்கரையை போட்டு 2 ஸ்பூன் தண்ணீர் ஊற்றி கலந்து விட்டு குறைவான தணலில் கொதிக்க வைத்து சர்க்கரை பகை தயார் செய்து அதை நெய் தடவி வைத்துள்ள பாத்திரத்தில் ஊற்றி வைத்துக்கொள்ளவும்.
  7. வேக வைத்த ரவையை எடுத்து கலந்து வைத்துள்ள முட்டை கலவையில் சிறிது சிறிதாக போட்டு கலந்து விடவும்.
  8. சர்க்கரை பகை ஊற்றி வைத்துள்ள பாத்திரத்தில் முட்டை மற்றும் ரவை கலந்த கலவையை ஊற்றவும்.
  9. அடுப்பில் குக்கர் அல்லது இட்லியை வேக வைக்கும் பாத்திரத்தை வைத்து,அதில் ஒரு சிறிய ஸ்டாண்ட் வைத்து,அது மூழ்கும் அளவு தண்ணீர் ஊற்றி,அதன்மேல்  கேக் கலவை உள்ள பாத்திரத்தை வைத்து ஒரு தட்டு வைத்து முடி 25 நிமிடம் வேக வைக்கவும்.
  10. 25 நிமிடம் கழித்து கேக் தயார் ஆகி உள்ளதா என பார்க்க ஒரு கத்தியை கேக்கில் குத்தி பார்க்க வேண்டும்.கத்தியில் கேக் மாவு ஓட்டக்கூடாது இந்த பதத்தில் அடுப்பில் இருந்து பாத்திரத்தை இறக்கவும்.
  11. சுவையான கேரமல் புட்டிங் ரெடி.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 8 hours ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 8 hours ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 6 months 10 hours ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 10 hours ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 8 months 8 hours ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 8 months 8 hours ago