முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

கொய்யாப்பழ கீர்

Cooking time in minutes: 
30
Ingredients: 

கொய்யாப்பழ கீர் செய்யத்  தேவையான பொருள்கள்;

  1. சிவப்பு கொய்யாப்பழம் - 7
  2. பால் - 1/2 லிட்டர். 
  3. நெய் - 5 ஸ்பூன்.
  4. முந்திரி பருப்பு - 20.
  5. கருப்பு திராட்சை - 30.
  6. மஞ்சள் திராட்சை – 25.  
  7. உடைத்த முந்திரி பருப்பு - 20 கிராம்.
  8. பேரிச்சம் பழம்  - 10.
  9. சர்க்கரை - 3 கரண்டி.
  10. பொடி செய்த ஏலக்காய் - 5.
  11. குங்குமப்பூ  - சிறிதளவு.  
Method: 

செய்முறை ;-

  1. அடுப்பில் கடாய்  வைத்து  1/2 லிட்டர் பால் மற்றும் ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றி  நன்றாக சூடு படுத்தி  ஆற வைத்துக்கொள்ளவும். 
  2. அடுப்பில் கடாய் வைத்து ஒரு  ஸ்பூன் நெய் ஊற்றவும்,நெய் சூடானவுடன் 20 முந்திரி பருப்பை போட்டு பொன்னிறமாக வறுக்கவும்,இதனுடன் 5 கருப்பு திராட்சையை போட்டு வறுக்கவும்,இதை கடைசியாக  கொய்யாப்பழ கீர் மேல தூவ எடுத்து வைத்துக்கொள்ளவும்.
  3. அடுப்பில் கடாய் வைத்து ஒரு  ஸ்பூன் நெய் ஊற்றவும்,நெய் சூடானவுடன், 25 கிராம் மஞ்சள் திராட்சையை  போட்டு  வறுத்து ஒரு தட்டில் எடுத்து வைத்துக்கொள்ளவும்.
  4. அடுப்பில் கடாய் வைத்து ஒரு  ஸ்பூன் நெய் ஊற்றவும்,நெய் சூடானவுடன்,25 கருப்பு திராட்சையை  போட்டு  வறுத்து ஒரு தட்டில் எடுத்து வைத்துக்கொள்ளவும்.
  5. அடுப்பில் கடாய் வைத்து ஒரு  ஸ்பூன் நெய் ஊற்றவும்,நெய் சூடானவுடன், 20 கிராம் உடைத்த  முந்திர பருப்பை போட்டு  பொன்னிறமாக வறுத்து ஒரு தட்டில் எடுத்து வைத்துக்கொள்ளவும்.
  6. அடுப்பில் கடாய் வைத்து பொடியா நறுக்கிய 10 பேரிச்சம் பழத்தை  போட்டு ஒரு  ஸ்பூன் நெய் ஊற்றி நன்றாக வறுத்து ஒரு தட்டில் எடுத்து வைத்துக்கொள்ளவும்.
  7. மிக்சி ஜாரில் சுத்தம் செய்த 7 சிவப்பு கொய்யாப்பழத்தை நறுக்கி போட்டு சிறிதளவு பால் ஊற்றி அரைக்கவும்,இதனுடன் 3 கரண்டி சர்க்கரையை  போட்டு நன்றாக அரைத்து ஒரு பாத்திரத்தில் வைத்துக்கொள்ளவும்.
  8. இதில் நெய்யில் வறுத்து வைத்துள்ள முந்திரி பருப்பு,மஞ்சள் திராட்சை, பேரிச்சம் பழம்,ஏலக்காய் பொடி,குங்குமப்பூ,ஆகியவற்றை போட்டு தேவையான அளவு பால்  ஊற்றி நன்றாக கலந்து விடவும்.
  9. இதன் மேல் வறுத்து வைத்துள்ள முந்திரி பருப்பு,கருப்பு திராட்சை, மற்றும் சிறிதளவு குங்குமப்பூவை தூவி விடவும்.
  10. சுவையான கொய்யாப்பழ கீர் ரெடி.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 3 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 4 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 6 months 4 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 4 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 8 months 4 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 8 months 4 days ago