முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சவுதி அரேபியாவில் கொலை செய்தவரின் தலை துண்டிப்பு

வெள்ளிக்கிழமை, 31 அக்டோபர் 2014      உலகம்
Image Unavailable

 

ரியாத், நவ 1 - சவுதி அரேபியாவில் கடுமையான சட்டங்கள் உள்ளன. அங்கு குற்றம் புரியும் கைதிகளுக்கு மிகப் பெரிய தண்டனைகள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் சவுதி அரேபியாவை சேர்ந்த ஹாடிபின் ரஷீத் அல் தொசாரி என்பவருக்கும், உடன் வேலை பார்ப்பவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. அதை தொடர்ந்து அவர் அந்த நபரை கொலை செய்தார்.

அதை தொடர்ந்து ஹாடி பின் ரஷீத் அல் தொசாரி கைது செய்யப்பட்டார். அவர் மீது கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த கோர்ட் அவரது தலையை துண்டிக்க உத்தரவிட்டது. அதன்படி நேற்று முன்தினம் தலை துண்டித்து அவருக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளதாக மனித உரிமை ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்