முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தங்கம் விலை சற்று குறைவு

வியாழக்கிழமை, 25 ஏப்ரல் 2024      வர்த்தகம்
Gold 2024-04-06

சென்னை, சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.160 குறைந்து ரூ. .53, 680க்கு விற்பனையானது. 

தங்கத்தின் விலை எப்பொழுதும் ஏறி, இறங்கி வருவது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு ஏப்ரல் மாத தொடக்கத்திலிருந்தே தங்கத்தின் விலை உயர்ந்து வந்தது. இதையடுத்து கிடுகிடுவென தங்கம் விலை அதிகரித்து சவரனுக்கு ரூ. 53 ஆயிரத்தை எட்டியது. இந்த தொடர் விலையேற்றம் நடுத்தர மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

ஒரு சவரன் ஆபரணத்தங்கம் நேற்று முன்தினம் ரூ.53,840க்கு விற்பனையான நிலையில், நேற்று ரூ.160 குறைந்து ரூ.53, 680க்கு விற்பனையானது.  வெள்ளி விலையில் எந்த மாற்றம் இல்லாமல்  ஒரு கிராம் ரூ.86.50க்கும் ஒரு கிலோ ரூ.86,500-க்கும் விற்பனையானது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து