முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருவேங்கடம் பேரூராட்சி பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள்: கலெக்டர் சந்தீப் நந்தூரி பார்வையிட்டார்

வியாழக்கிழமை, 26 அக்டோபர் 2017      திருநெல்வேலி
Image Unavailable

திருநெல்வேலி மாவட்டம், திருவேங்கடம்  பேரூராட்சிப்  பகுதியில் மெகா துப்புரவு பணிகள் மற்றும் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் மற்றும் சுகாதாரத் துறையின் மூலம் சிறப்பு மருத்துவ முகாம்  நடைபெற்றது. இப்பணிகளை கலெக்டர் சந்தீப் நந்தூரி நேரில் சென்று பார்வையிட்டார்.திருவேங்கடம் பேரூராட்சி பகுதியில், பேரூராட்சி மற்றும் சுகாதாரத் துறை இணைந்து மெகா துப்புரவு பணிகள், டெங்கு கொசு ஒழிப்பு பணிகள், அக்ரகாரம் தெரு மற்றும் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்று வருவதை கலெக்டர் நேரில் ஆய்வு செய்தார். அப்போது, 20 கொசு ஒழிப்பு பணியாளர்கள், 17 துப்புரவு பணியாளர்கள், 8 திடக்கழிவு மேலாண்மை பணியாளர்கள் இப்பணிகளை மேற்கொண்டனர். கொசு ஒழிப்பு பணியாளர்கள் பல்வேறு வீடுகளில் உரிமையாளர்கள் தங்களை வீடுகளுக்குச் சென்று பணிகள் மேற்கொள்ள அனுமதிக்க மறுத்து விடுகிறார்கள் என கலெக்டர் அவர்களிடம் தெரிவித்தனர்.

துப்புரவு பணிகள்

கலெக்டர் பேரூராட்சி பணியாளர்களுடன், வட்டாட்சியர் மற்றும் காவல் துறையினருடன் இணைந்து நடவடிக்கை மேற்கொள்ளவும், பல்வேறு தினங்களாக தொடர்ந்து பூட்டப்பட்டுள்ள வீடுகளின் உரிமையாளர்களுக்கு தகவல் தெரிவித்து, தூய்மை பணிகளை விரைந்து மேற்கொள்ள வேண்டுமெனவும், கொசு புழு காணப்படும் வீடுகள் மற்றும் மிகவும் சுகாதாரமின்றி குப்பைகளை குவித்து வைத்து உள்ள வீடுகளின் உரிமையாளர்களுக்கு நோட்டீஸ் அனுப்பவும், அபராதம் விதிக்கவும் பேரூராட்சி அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். தொடர்ந்து, திருவேங்கடம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி பகுதியில் ஆய்வு மேற்கொண்டார். பள்ளி ஆசிரியர்களிடம் காய்ச்சல் பாதிக்கப்பட்டு, விடுமுறையில் உள்ள குழந்தைகள் குறித்து சுகாதாரத் துறைக்கு உடனடியாக தெரிவிக்க வேண்டுமென உத்தரவிட்டார்.

ஆய்வின்போது, சுகாதாரப்பணிகள் துணை இயக்குநர் மரு.சோமசுந்தரம், ஊரக வளர்ச்சி முகமை செயற்பொறியாளர் சக்திமுருகன், திருவேங்கடம் பேரூராட்சி செயல் அலுவலர் கலாராணி, திருவேங்கட வட்டாட்சியர் ராஜூ, வட்டார மருத்துவ அலுவலர் மரு.பாலவிக்னேஷ் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து