முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஈரோட்டில் 64-ஆவது அனைத்திந்தியக் கூட்டுறவு வாரவிழா பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவியர்களுக்கான பேச்சுப்போட்டி கூட்டுறவு வங்கித் தலைவர் என். கிருஷ்ணராஜ் துவக்கி வைத்தார்

ஞாயிற்றுக்கிழமை, 12 நவம்பர் 2017      ஈரோடு
Image Unavailable

ஈரோட்டில் 64-ஆவது அனைத்திந்தியக் கூட்டுறவு வாரவிழாவினை முன்னிட்டு பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவியர்களுக்கான பேச்சுப்போட்டியினை வாரவிழாக் குழுத்தலைவரும், ஈரோடு மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் தலைவருமான என். கிருஷ்ணராஜ்  துவக்கி வைத்தார்.

64 ஆவது அனைத்திந்தியக் கூட்டுறவு வாரவிழாவினை முன்னிட்டு பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவியர்களுக்கு பேச்சுப்போட்டி மற்றும் கட்டுரைப்போட்டி இடையன்காட்டுவலசில் உள்ள  மாநகராட்சி உயர்நிலைபள்ளியில் 11.11.2017 காலை 10.30 மணிக்கு நடத்தப்பட்டது.

இவ்விழாவில் ஈரோடு மண்டல கூட்டுறவுச் சங்கங்களின் இணைப்பதிவாளர் மு. முருகன்  தலைமை தாங்கினார்.

64 ஆவது அனைத்திந்திய கூட்டுறவு வாரவிழா குழுத் தலைவரும் ஈரோடு மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் தலைவருமான என். கிருஷ்ணராஜ்  பேச்சுப்போட்டியினை துவக்கி வைத்து விழாப் பேருரையாற்றினார்கள்.  அவர்தம் உரையில் முன்னாள் பாரத பிரதமர்  ஜவஹர்லால் நேரு  பிறந்த நாளான நவம்பர் 14 ஆம் தேதி துவங்கி நவம்பர் 20 வரை ஏழுநாட்கள் ஈரோடு மாவட்டத்தில் சிறப்பாக கொண்டாடப்படவுள்ளது.  இதன் முதல்நிகழச்சியாக பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவியர்களுக்கு பேச்சுப்போட்டி மற்றும் கட்டுரைப்போட்டிகள் கூட்டுறவு வாரவிழாக் குழுவின் மூலம் நடத்தப்படுகிறது. கூட்டுறவு என்பது, பல்வேறு முறைகளில் காணும் சிறப்பியல்புகளையும், நன்மைகளையும் ஏற்றுக் கொண்டும், அவற்றின் தீமைகளை நீக்கியும் இடைப்பட்ட சமநிலையாக இணைக்கும் சங்கிலியாக விளங்குகின்றது.  கூட்டுறவு அமைப்பில் மக்கள் தாமாகவே தம்மை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும்.  பள்ளி மாணவ, மாணவியர்களுக்க கூட்டுறவு குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கோடு இதுபோன்ற போட்டிகள் நடத்தப்படுகின்றன.  வேளாண்மையின் வெகுவான முன்னேற்றத்திற்கு கூட்டுறவு அமைப்புகளே பொருத்தமானவை என்று சொன்னால் அது மிகையாகாது.  “எதிலும் கூட்டுறவு, எங்கும் கூட்டுறவு” எனும் கொள்கை மிகவும் இன்றியமையாததாகும்.  இன்று நடைபெறும் பேச்சுப்போட்டி மற்றும் கட்டுரைப்போட்டிகளில்  உயர்நிலைப்பள்ளி, மேல்நிலைப்பள்ளி, கல்லூரி அளவில் மாணவ, மாணவியர்கள் திரளாக கலந்து கொண்டமைக்கு எனது பாராட்டினையும், வாழத்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறினார்.

இவ்விழாவில் ஈரோடு மாவட்ட கூட்டுறவு ஒன்றிய தலைவர் வி. தெய்வநாயகம் , ஈரோடு மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி துணைப்பதிவாளர் ஃ முதன்மை வருவாய் அலுவலர் அ. அழகிரி  ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினார்கள்.

இப்போட்டிகளுக்கு நடுவர்களாக கூட்டுறவுச் சங்கங்களின் துணைப்பதிவாளர் ப. மணி , கூட்டுறவு சார்பதிவாளர் என். ஸ்ரீதர் , மற்றும் எம்.என். சுமதி  ஆகியோர் பங்குபெற்றார்கள்.  முன்னதாக ஈரோடு மாவட்ட கூட்டுறவு ஒன்றிய மேலாண்மை இயக்குனர் மு.பா. பாலாஜி  வரவேற்றார்.

இப்போட்டிகளில் ஈரோடு மாவட்டத்தில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளிலிருந்து 100க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து