முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அடுத்தடுத்து குவிந்த புத்தாண்டு வாழ்த்துகள்: அரை மணி நேரம் முடங்கிய வாட்ஸ் அப்

திங்கட்கிழமை, 1 ஜனவரி 2018      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி, புத்தாண்டு தினத்தை முன்னிட்டு உலகம் முழுவதும் கோடிக்கணக்கான மக்கள் ஒரே நேரத்தில் வாழ்த்துகள் அனுப்ப முயற்சித்ததால் சமூக வலைதள ஊடகமான வாட்ஸ் அப் சிறிது நேரம் முடங்கியது.
உலக முழுவதும் புத்தாண்டு வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது. இதனையடுத்து, மக்கள் ஒருவொருக்கொருவர் வாழ்த்துகளை தெரிவித்து தங்கள் அன்பை பறிமாறிக் கொண்டனர்.

இந்த நிலையில் கோடிக்கணக்கான மக்களுக்கு குறுஞ்செய்தி தகவல்களை அனுப்ப பயன்படும் சமூக வலைதளமான 'வாட்ஸ் அப்' சுமார் அரை மணி நேரம் வரை முடங்கியது.
இதன் காரணமாக புத்தாண்டு வாழ்த்துகளை அனுப்ப முடியாமல் வாட்ஸ் அப் பயனாளர்கள் சிறிது நேரம் தடுமாறினர்.

இந்தியாவில் மட்டுமல்லாது இங்கிலாந்து, ஜப்பான், பனாமா, தென் ஆப்பிரிக்கா, கத்தார், ஸ்பெயின் ஆகிய நாடுகளில் வாட்ஸ் அப் சிறுது நேரம் முடங்கியது.

இதனால் பல பயனாளர்கள் ஃபேஸ்புக், ட்விட்டர் போன்ற இதர சமூக வலைதளங்களில் புத்தாண்டு தினத்தன்று வழக்கம்போல் வாட்ஸ் அப் முடங்கிவிட்டது என்று தங்களது அதிருப்தியை பதிவிட்டனர்.
இது குறித்து 'வாட்ஸ் அப்' நிறுவனம் அதிகாரபூர்வ தகவல் ஏதும் இன்னும் வெளியிடவில்லை. ஆனால், சர்வர் செயலிழந்ததால் இப்பிரச்சினை ஏற்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து