சட்டப்பேரவையில் ஜெயலலிதா படம் திறப்பு தமிழக முதல்வர் _ துணை முதல்வருக்கு பாராட்டு தெரிவித்து திண்டுக்கல் மாவட்ட அ.தி.மு.க. தீர்மானம்

திங்கட்கிழமை, 12 பெப்ரவரி 2018      திண்டுக்கல்
dglvotes  12 2 18

திண்டுக்கல், - தமிழக சட்டப்பேரவையில் மறைந்த முதல்வர் ஜெயலலிதா படம் திறக்கப்பட்டதற்கு திண்டுக்கல் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் பாராட்டு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தமிழகம் முழுவதும் அ.தி.மு.க. சார்பில் புதிய உறுப்பினர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. திண்டுக்கல் மாவட்டத்தில் புதிய உறுப்பினர் சேர்க்கையை மாவட்ட அவைத்தலைவரும், வனத்துறை அமைச்சருமான சி.சீனிவாசன் தொடங்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து மாவட்டம் முழுவதும் இப்பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. அந்தந்த பகுதி நகர, ஒன்றிய, பேரூர், கிளைக்கழகங்களில் நிர்வாகிகள் புதிய உறுப்பினர்களை சேர்த்து விண்ணப்பப் படிவங்களில் பூர்த்தி செய்து வருகின்றனர்.
உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மாவட்ட செயலாளர் மருதராஜ் குணமடைந்து வீடு திரும்பினார். அவரது வீட்டில் கட்சி நிர்வாகிகள் சிறப்பான வரவேற்பு அளித்து பூரண நலம் பெற வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொண்டனர். அதன்பின் மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. இக்கூட்டத்தில் தமிழக சட்டப்பேரவையில் மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா திருவுருவப் படத்தைத் திறந்து நடவடிக்கை எடுத்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோருக்கு பாராட்டு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும் வரும் 24ம் தேதி ஜெயலலிதா பிறந்த நாளை சிறப்பாக கொண்டாடுவது எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அதனைத் தொடர்ந்து திண்டுக்கல் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் புதிய உறுப்பினர் சேர்க்கைக்கான விண்ணப்பப் படிவத்தை மாவட்ட செயலாளரும், முன்னாள் மேயருமான மருதராஜ் வழங்கினார். அதனை அபிராமி கூட்டுறவு பண்டகசாலை தலைவர் பாரதிமுருகன் பெற்றுக்கொண்டார். நிகழ்ச்சியில் ஆவின் தலைவர் திவான்பாட்சா, தொழிற்சங்க செயலாளர் ஜெயராமன், பேரவை செயலாளர் வி.டி.ராஜன், வழக்கறிஞர் பழனிச்சாமி, பகுதி செயலாளர்கள் மோகன், சுப்பிரமணி, சேசு, துளசிராம், முன்னாள் கவுன்சிலர்கள் சக்திவேல், ராமலிங்கம், வார்டு செயலாளர் பிரேம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து