முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மதுரை - எம்.ஜி.ஆர் பேருந்து நிலையத்தில் தமிழக முதல்வர் அம்மா வைஃபை மண்டலத்தை காணொளிக்காட்சி மூலம் துவக்கி வைத்தார்

வியாழக்கிழமை, 5 ஏப்ரல் 2018      மதுரை
Image Unavailable

மதுரை. - தமிழ்நாடு முதலமைச்சர் திரு.எடப்பாடி.கே.பழனிசாமி அவர்களால் சென்னை தலைமைச்செயலகத்திலிருந்து காணொளிக்காட்சி மூலம் மதுரை மாவட்டம், எம்.ஜி.ஆர் பேருந்து நிலையத்தில் வைஃபை மண்டலம் இன்று (05.04.2018) துவக்கி வைக்கப்பட்டதை மாவட்ட ஆட்சித்தலைவர்  கொ.வீர ராகவ ராவ்,  மற்றும் மதுரை வடக்கு சட்டமன்ற உறுப்பினர்  .வி.வி.இராஜன்செல்லப்பா ஆகியோர் இச்சேவையினை பயன்படுத்தி பார்வையிட்டனர்.
 இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர்  பேசும் பொழுது தெரிவித்ததாவது:
  தமிழ்நாடு முதலமைச்சர்   முதல்கட்டமாக சென்னை, கோவை, சேலம், திருச்சி மற்றும் மதுரை உள்ளிட்ட 5 மாவட்டங்களில் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக அம்மா வைஃபை மண்டலத்தினை காணொளிக்காட்சி மூலம் திறந்து வைத்துள்ளார்கள்.  மதுரை மாவட்டத்தில் சிறப்பு வாய்ந்த எம்.ஜி.ஆர் பேருந்து நிலையத்தில் இத்தகைய சேவை துவக்கி வைக்கப்பட்டுள்ளது.  இச்சேவையானது மதுரை மாவட்டம் தகவல் தொழில்நுட்பவியல் துறை மற்றும் தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி நிறுவனத்தின் வாயிலாக பொதுமக்கள் ஒரு நாளில் 20 நிமிடங்கள் அதிவேக இணைய சேவையை இலவசமாக பயன்படுத்தலாம். 
 20 நிமிடங்கள் இலவச பயன்பாடு முடிந்த பின்னர் அம்மா வைஃபை சேவையை தொடர்ந்து பெறுவதற்கு ஒரு மணி நேரத்திற்கு ரூ.10 என்ற கட்டணத்தை கிரெடிட் கார்டு அல்லது டெபிட் கார்டு மூலம் செலுத்தி பயன்பெறலாம்.  இச்சேவையை பயன்படுத்த ஸ்மார்ட் போன் மூலம் வைஃபை பயன்பாட்டு சின்னத்தை அழுத்தி வைஃபை பட்டியலில் தெரியும் அம்மா வைஃபை என்பதனை தேர்வு செய்து, அதில் பெயர், அலைப்பேசி எண், இ.மெயில் முகவரி உள்ளிட்டவைகளை பதிவு செய்து தங்கள் அலைபேசிக்கு வந்துள்ள ஒரு நேரம் கடவுச்சொல் (ழுவுP) பதிவு செய்த பின்னர் இச்சேவையினை பயன்படுத்தலாம். பொதுமக்கள் அனைவரும் இச்சேவையினை பயன்படுத்தி பயன்பெற வேண்டும் என தெரிவித்தார்.
 இந்நிகழ்ச்சியில் செய்தி மக்கள் தொடர்பு அலுவலர்  க.அ.முகம்மது ரசூல், கேபிள் டி.வி வட்டாட்சியர்  லயனல் ராஜ்குமார் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து