முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

2016-ம் ஆண்டில் பா.ஜ.க. வருமானம் ரூ.1000 கோடி மிகப் பெரிய பணக்கார கட்சியாம்!

செவ்வாய்க்கிழமை, 10 ஏப்ரல் 2018      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி: கடந்த 2016-17ம் நிதி ஆண்டில் ரூ.1,034 கோடி வருமானம் ஈட்டி நாட்டிலேயே மிகப் பெரிய பணக்கார கட்சியாக பா.ஜ.க வலம் வருகிறது என்று தகவல் வெளியாகி உள்ளது. நாட்டில் உள்ள 7 தேசிய கட்சிகளின் ஒட்டுமொத்த வருவாய் ரூ. ஆயிரத்து 559 கோடி என்றால், அதில் ஏறக்குறைய ரூ. 1,000 கோடி பா.ஜ.க கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

டெல்லியைச் சேர்ந்த ஜனநாயகத்துக்கான சீர்திருத்த அமைப்பு தேசிய கட்சிகள் தேர்தல் ஆணையத்திடம் தாக்கல் செய்த வருமானவரி தாக்கலை ஆய்வு செய்து அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டு இருப்பதாவது,
கடந்த 2016-17ம் ஆண்டில் 7 தேசிய கட்சிகளின் ஒட்டுமொத்த வருமானம் ரூ.1,559.17 கோடியாகும். இதில் காங்கிரஸ் கட்சியின் வருமானம் ரூ.225.36 கோடியாகும். இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் வருமானம் ரூ.2.08 கோடியாகும். மத்தியில் ஆளும் பா.ஜ.கவின் ஆண்டு வருமானம் ரூ.1,034.27 கோடியாகும்.

2016-17-ம் ஆண்டில் பா.ஜ.க. தங்களுக்கு கிடைத்த வருமானத்தில் 96.41 சதவீதம், அதாவது, ரூ.997.12 கோடி நன்கொடை, மானியங்கள், தொண்டர்கள் பங்களிப்பு மூலம் கிடைத்தது எனத் தெரிவித்துள்ளது. அதேபோல, கடந்த 2016-17ம் ஆண்டில் தேர்தல் பிரசாரம், தேர்தல் செலவுகளுக்காக ரூ.606.64 கோடியும், நிர்வாகரீதியாக ரூ.69.78 கோடியும் செலவு செய்யப்பட்டுள்ளதாக பா.ஜ.க தேர்தல் ஆணையத்திடம் கணக்கு தெரிவித்துள்ளது. காங்கிரஸ் கட்சி ரூ.149.65 கோடி செலவு செய்துள்ளதாக தெரிவித்துள்ள நிலையில், அதில் ரூ.115.65 கோடி நிர்வாகக் காரங்களுக்காக செலவு செய்துள்ளதாகத் தெரிவித்துள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து