ஈராக் தேர்தலில் 2 கம்யூனிஸ்ட் பெண்கள் எம்.பி.க்களாக தேர்வு

வியாழக்கிழமை, 17 மே 2018      உலகம்
Erak 2018 05 17

பாக்தாத்: ஈராக் தேர்தலில் அதன் புனித நகரில் 2 பெண்கள், அதுவும் கம்யூனிஸ்ட் கட்சிப் பெண்கள் எம்.பி.க்களாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

ஈராக்கில் நடந்த பொதுத்தேர்தலில் ஈராக்கிய கம்யூனிஸ்ட் கட்சி வரலாறு காணாத வெற்றி பெற்றுள்ளது. அக்கட்சியின் சார்பில் 2 பெண்கள் எம்.பி.க்களாக செல்லும் வாய்ப்பு கிடைத்துள்ளது.

அமெரிக்க எதிர்ப்பை அடிப்படையாக கொண்டு அமைக்கப்பட்ட கம்யூனிஸ்ட் சதரிஸ்ட் கூட்டணி சார்பில் போட்டியிட்ட ஈராக்கிய கம்யூனிஸ்ட் கட்சியின் இரண்டு உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். 1934-ல் உருவாக்கப்பட்ட ஈராக் கம்யூனிஸ்ட் கட்சி முதல்முறைாயக நாடாளுமன்றத்தில் பிரதிநிதித்துவம் பெற்றுள்ளது.


முஸ்லீம் மத நம்பிக்கையாளர்களின் புனித நகரங்களில் ஒன்றான நஜாபில் சுகாப் அல் கதீப் வெற்றிபெற்றுள்ளார். கதீப் ஒரு ஆசிரியை வறுமைக்கு எதிரான சமூகப் போராளி, பெண்ணுரிமை போராளியுமாவார். திகரில் கட்சி வேட்பாளரான ஹைப அல் அமீனும் வெற்றி பெற்றுள்ளனர். முக்தாத அல் சபரின் தலைமையிலான அமெரிக்க எதிர்ப்பு கூட்டணி ஈராக் நாடாளுமன்றத் தேர்தலில் முன்னிலை பெற்றுள்ளது. ஆனாலும் சதரிஸ்ட் கம்யூனிஸ்ட் கூட்டணியை அரசமைக்க அனுமதிக்க முடியாது என்பது ஈரானின் நிலைபாடாக உள்ளது.

அமெரிக்காவும் என்னவிலை கொடுத்தாவது சதரிஸ்ட் கம்யூனிஸ்ட் கூட்டணியை ஆட்சி அமைக்க விடாமல் தடுக்க முயன்று வருகிறது. ஈராக் கம்யூனிஸ்ட் கட்சியின் வெற்றி மத்திய கிழக்கு பகுதியில் உள்ள கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு உற்சாகமளிக்கும் என்பது உறுதி. 2008-ல் முன்னாள் அமெரக்க அதிபர் ஜார்ஜ் டபிள்யூ புஷ்ஷுக்கு எதிராக காலணி வீசிய பெண் பத்திரிகையாளர் மும்தாஸ அல் செய்தியும் இந்த தேர்தலில் வெற்றி பெற்றுள்ளார்.

ஈராக்கில் அமெரிக்க படையெடுப்புக்குப் பிறகு நடந்த அக்கிரமவாத படுகொலைகள், பயங்கரவாதங்கள், ஐ.எஸ். எழுச்சி, உலக நாடுகள் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கும் பயங்கரங்களுக்குப் பிறகு இந்த புத்தெழுச்சி அவர்களுக்கு ஒரு புதிய நம்பிக்கையை அளிக்கும் என்று எதிர்பார்க்கலாம்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து