முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜாகீர் கானை பின்னுக்குத் தள்ளிய அஸ்வின்

வெள்ளிக்கிழமை, 15 ஜூன் 2018      விளையாட்டு
Image Unavailable

ஆப்கான் அணியுடனான டெஸ்டிற்கு முன் அஸ்வின் 57 டெஸ்ட் போட்டியில் 311 விக்கெட்டுக்கள் வீழ்த்தியிருந்தார். நேற்றைக்கு 2 விக்கெட்டுக்கள் வீழ்த்தியதன் மூலம் டெஸ்ட் போட்டியில் 313 விக்கெட்டுக்கள் வீழ்த்தியுள்ளார். இதன்மூலம் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் அதிக விக்கெட்டுக்கள் வீழ்த்திய இந்தியர்களின் பட்டியலில் ஜாகீர் கானை பின்னுக்குத் தள்ளியுள்ளார்.

ஜாகீர் கான் 311 விக்கெட்டுக்கள் வீழ்த்தி 4-வது இடத்தில் இருந்தார். தற்போது அஸ்வின் 4-வது இடத்திற்கு முன்னேறி ஜாகீர் கானை ஐந்தாவது இடத்திற்கு தள்ளியுள்ளார். ஹர்பஜன் சிங் 417 விக்கெட்டுக்களுடன் 3-வது இடத்திலும், கபில்தேவ் 434 விக்கெட்டுக்களுடன் 2-வது இடத்திலும், 619 விக்கெட்டுக்களுடன் கும்ப்ளே முதல் இடத்திலும் உள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து