முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காஷ்மீரில் பலத்த பாதுகாப்புக்கு இடையே அமர்நாத் யாத்திரை தொடங்கியது

புதன்கிழமை, 27 ஜூன் 2018      இந்தியா
Image Unavailable

ஸ்ரீநகர்: அமர்நாத் குகைக்கோயிலில் தோன்றியுள்ள பனி லிங்கத்தை தரிசனம் செய்வதற்காக அமர்நாத் யாத்திரையின் முதல் குழு காஷ்மீரில் இருந்து நேற்று புறப்பட்டு சென்றது.

40 நாட்கள் யாத்திரை ...
ஜம்மு-காஷ்மீர் மாநிலம், அமர்நாத் குகைக்கோயிலில் ஆண்டுதோறும் தோன்றும் பனி லிங்கத்தை தரிசிக்க ஜம்மு வழியாக லட்சக்கணக்கான யாத்ரீகர்கள் பயணம் செய்வார்கள். 40 நாட்கள் இந்த யாத்திரை நீடிக்கும்.

வீரர்களுக்கு அறிவுறுத்தல்
கடந்த வருடம் ஜூலை மாதம் யாத்திரீகர்கள் சென்ற பேருந்தை குறிவைத்து பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 7 பேர் பலியாகினர், 12 பேர் படுகாயம் அடைந்தனர். இந்த, தாக்குதல் சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த வருட அமர்நாத் யாத்திரையை முன்னிட்டு, பக்தர்களுக்கு அமைதியான மற்றும் பாதுகாப்பான யாத்திரையை உறுதி செய்ய, சர்வதேச எல்லை மற்றும் எல்லைக்  கட்டுப்பாட்டு கோடு பகுதிகளில் உள்ள பாதுகாப்பு படையினர் தீவிர எச்சரிக்கையுடன் இருக்ககும்படி மத்திய அரசு ராணுவ வீரர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.

முதல் குழு சென்றது
இந்நிலையில், புனித யாத்திரையின் முதல் குழு காஷ்மீர் மாநிலம், பகவதி நகரில் உள்ள பாகல்காம் மற்றும் பல்தல் அடிவார முகாம்களில் இருந்து வாகனங்களில் நேற்று புறப்பட்டு சென்றது. முதல் குழுவை காஷ்மீர் மாநில தலைமைச் செயலாளர் சுப்பிரமணியம், ஆளுநரின் ஆலோசகர்களான வியாஸ், விஜய்குமார் ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர். நேற்று தொடங்கிய அமர்நாத் யாத்திரை வரும் ஆகஸ்ட் மாதம், ரக்‌ஷா பந்தன் கொண்டாடப்படும் தினமான 26-ம் தேதி நிறைவடைகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து