தனி மனித சுதந்திரத்தைப் பறிக்கிறது மோடி அரசு காங்கிரஸ் குற்றச்சாட்டு

வெள்ளிக்கிழமை, 14 செப்டம்பர் 2018      இந்தியா
Congress party 14-09-2018

புதுடெல்லி,தனி மனித சுதந்திரத்தைப் பறிக்கும் நோக்கில் மோடி அரசின் செயல்பாடு உள்ளது என்று கூறியுள்ளார் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் பொதுச் செயலர் சஞ்சய்தத்.

கரூரில்  நடைபெற்ற காங்கிரஸ் கட்சியின் செயல்வீரர்கள் கூட்டத்தில் பங்கேற்ற அவர் மேலும் கூறியதாவது:
காங்கிரஸ் ஆட்சியின் தவறான பொருளாதாரக் கொள்கையால்தான் தற்போது நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி குறைந்து விட்டதாக மோடி கூறுவது பொய்.  டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு கடும் வீழ்ச்சியடைந்துள்ளதற்கு காரணம் மோடிதான்.

காங்கிரஸ் ஆட்சியில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டபோது அதை மன்மோகன்சிங்கும், சிதம்பரமும் சமாளித்து பொருளாதார வீழ்ச்சியில் இருந்து நாட்டை மீட்டனர். ஆனால் அவர்கள் மீது பா.ஜ.க. அரசு ஆதாரமில்லா குற்றச்சாட்டை முன் வைக்கிறது.
நாடு மிக மோசமான நிலையை நோக்கிச் செல்கிறது. பண மதிப்பிழப்பு, கருப்பு பண மீட்பால் நாட்டில் தீவிரவாதம் ஒழிந்துவிடும் என்றார் மோடி. அவ்வாறு எதுவும் நடக்கவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து