முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

குகன் பாறை கிராமத்தில் பயனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் கலெக்டர் சிவஞானம், வழங்கினார்

புதன்கிழமை, 17 அக்டோபர் 2018      விருதுநகர்
Image Unavailable

 விருதுநகர்,- விருதுநகர் மாவட்டம்  வெம்பகோட்டை வட்டம் குகன்பாறை கிராமத்தில் மாவட்ட ஆட்சியர் அவர்களின் மக்கள் தொடர்பு திட்ட முகாம் மாவட்ட ஆட்சித்தலைவர்  .அ.சிவஞானம், நடைபெற்றது. இம்முகாமில் பொதுமக்களிடமிருந்து பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக மனுக்கள் பெறப்பட்டது. இம்மனுக்களை மாவட்ட ஆட்சித்தலைவர்  சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் ஒப்படைத்து உரிய நடவடிக்கை உடன் எடுக்குமாறு உத்தரவிட்டார்கள்.
மேலும்;, வருவாய்த்துறையின் மூலம் இலவச வீட்டுமனை பட்டா திட்டத்தின் கீழ் 6 பயனாளிகளுக்கு மொத்தம் ரூ.1,80,000 மதிப்பிலான இலசவ வீட்டுமனை பட்டாக்களையும், பட்டா மாறுதல் முழுப்புலம் 20 பயனாளிகளுக்கும், நத்தம் பட்டா மாறுதல் முழுப்புலம்  3 பயனாளிகளுக்கும், நத்தம் பட்டா மாறுதல் உட்பிரிவு 5 பயனாளிகளுக்கும், பட்டா மாறுதல் உட்பிரிவு 9 பயனாளிகளுக்கும், நத்தம்10(1) நகல் 15 பயனாளிகளுக்கும், முதலமைச்சரின் உழவர் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் 33 பயனாளிகளுக்கு ரூ.95,500 மதிப்பிலான கல்வி உதவித்தொகையும்,  6 பயனாளிகளுக்கு ரூ.50,000 மதிப்பிலான திருமண உதவித்தொகைகளையும், 5 பயனாளிகளுக்கு ரூ.1,12,500 மதிப்பிலான இயற்கை மரண உதவி தொகைகளையும், 35 பயனாளிகளுக்கு புதிய உறுப்பினர் சேர்க்கைக்கான உத்தரவுகளையும், சமூக பாதுகாப்புத்திட்டத்தின் கீழ் 7 பயனாளிகளுக்கு ரூ.1,40,000 - மதிப்பிலான நலிந்தோர் உதவித்தொகைகளையும்,  17 பயனாளிகளுக்கு ரூ.17,000 - மதிப்பிலான முதியோர் உதவித்தொகைக்கான ஆணைகளையும், தோட்டக்கலைத்துறை  மூலமாக  2 பயனாளிகளுக்கு ரூ.600 - மதிப்பிலான காய்கறி விதைகளையும், வேளாண்மைத்துறை மூலம் 5 பயனாளிகளுக்கு ரூ.26,125 - மதிப்பிலான வேளாண் இடுபொருட்களையும், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை மூலம் 4 பயனாளிகளுக்கு ரூ.8,40,000 - மதிப்பிலான பசுமை வீடுகள் கட்டுவதற்கான உத்தரவுகளையும், குகன்பாறை ஊராட்சி அமைப்பிலான கூட்டமைப்பு மூலம் சக்தி விநாயகர் மகளிர் சுய உதவி குழுவிற்கு கடனுதவியாக ரூ.2 இட்சத்திற்கான காசோலையும் என மொத்தம் 173 பயனாளிகளுக்கு ரூ.16,61,725 - மதிப்பலான அரசின் பல்வேறு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர்  அ.சிவஞானம்;,  வழங்கினார்கள். 
 இம்முகாமில், மாவட்ட வருவாய் அலுவலர்  .கோ.உதயகுமார், சாத்தூர் வருவாய் கோட்டாட்சியர்  .காளிமுத்து,  உட்பட அனைத்துத்துறை அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து