முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பலூன் வெடித்து ரோகித்தை பயமுறுத்திய டோனி

வெள்ளிக்கிழமை, 2 நவம்பர் 2018      விளையாட்டு
Image Unavailable

வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி, இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து கிரிக்கெட் விளையாடி வருகிறது. ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் போட்டி தொடரில் இந்தி அணி 3- 1 என்ற கணக்கில் தொடரை வென்றது. இந்நிலையில் போட்டியின் வெற்றியை கொண்டாட்டம் இந்திய அணி வீரர்கள் தங்கியிருக்கும் ஹோட்டலில் நடைபெற்றது.

அணியின் கேப்டன் விராட் கோலிக்கு பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவிக்கப்பட்டது. பின்னர் அங்கு வைக்கப்பட்டிருந்த கேக்கை ரோஹித் சர்மா வெட்டினார். அப்போது அங்கு வைக்கப்பட்டிருந்த பலூனை வெடிக்கச்செய்து, ரோஹித்தை டோனி பயமுறுத்த அந்த இடமே கலகலப்பானது. கலகலப்பு அடங்குவதற்குள்ளேயே தான் வெட்டிய பெரிய சைஸ் கேக்கை கேதர் ஜாதவின் முகத்தில் பூசி அவரை மூச்சுமுட்ட வைத்தார் ரோஹித் சர்மா. இந்த வீடியோவை கிரிக்கெட் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து