கர்நாடக ஜனதா தள கட்சி எம்.எல்.ஏ மகனிடம் எடியூரப்பா பேரம் பேசும் ஆடியோ வெளியீடு

வெள்ளிக்கிழமை, 8 பெப்ரவரி 2019      இந்தியா
yeddyurappa 2018 5 8

பெங்களூரு, மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சி எம்.எல்.ஏ-வின் மகனிடம் எடியூரப்பா பேரம் பேசியதாக கூறும் ஆடியோ வெளியாகியுள்ளது.

கர்நாடகத்தில் காங்கிரஸ்-ஜனதா தளம்(எஸ்) கூட்டணி அரசு நடக்கிறது. முதல்-மந்திரியாக குமாரசாமி உள்ளார். ஆபரேஷன் தாமரை மூலம் காங்கிரஸ் மற்றும் ஜனதா தளம்(எஸ்) எம்.எல்.ஏ.க்களை இழுத்து ஆட்சி அமைக்க பா.ஜனதா முயற்சி செய்து வருகிறது.

 இந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்த கர்நாடக முதல்வர் குமாரசாமி, ஆடியோ கிளிப் ஒன்றை வெளியிட்டார். அந்த ஆடியோவில், கர்நாடக மாநில பா.ஜ.க. தலைவரும் எதிர்க்கட்சி தலைவருமான பி.எஸ்.எடியூராப்பாவும் மதசார்பற்ற ஜனதா தளம் எம்.எல்.ஏ நங்கனகவுடாவின் மகன் ஷார்னாவும் பேசுவது இடம் பெற்றுள்ளது. அதில், ரூ.25 லட்சமும், மந்திரி பதவியும் உங்கள் தந்தைக்கு தருவதாக எடியூரப்பா பேரம் பேசுவதாக இடம் பெற்றுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து