முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆஸ்திரேலிய அணியின் துணைப் பயிற்சியாளரானார் ரிக்கி பாண்டிங்

வெள்ளிக்கிழமை, 8 பெப்ரவரி 2019      விளையாட்டு
Image Unavailable

Source: provided

மெல்போர்ன் : ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் புதிய துணைப் பயிற்சியாளராக முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் நியமிக்கப்பட்டுள்ளார்.

வலுப்படுத்துவதற்காக...

50 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் மே மாதம் இங்கிலாந்தில் நடைபெற உள்ளது. ஆனால், ஆஸ்திரேலிய அணியைப் பொறுத்தவரை, உலகக்கோப்பையை வெல்லும் அளவுக்கு தயாரானதாக தெரியவில்லை.இந்தியா உடனான டெஸ்ட் மற்றும் ஒரு நாள் தொடரில் ஆஸ்திரேலிய அணி தடுமாறியது. இதனால், ஆஸ்திரேலிய அணியை வலுப்படுத்துவதற்காக அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் சில அதிரடியான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. சில நாட்களுக்கு முன், ஆஸ்திரேலிய அணியின் பந்துவீச்சு பயிற்சியாளர் டேவிட் சாக்கர் தனது பதவியை திடீரென ராஜினாமா செய்தார்.

துணை பயிற்சியாளராக...

இந்நிலையில், ஆஸ்திரேலியா அணியின் புதிய துணைப் பயிற்சியாளராக ரிக்கி பாண்டிங் நியமிக்கப்பட்டுள்ளார். தலைமை பயிற்சியாளராக ஜஸ்டின் லாங்கர் தொடர்ந்து நீடிக்கிறார். ஒரு காலத்தில் ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் மற்றும் அதிரடி பேட்ஸ்மேனாக ரிக்கி பாண்டிங் வலம் வந்தார். 2003, 2007-ம் ஆண்டுகளில் பாண்டிங் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி உலகக்கோப்பையை கைப்பற்றியது. உலகக் கோப்பை போட்டிகளின் வெற்றியின் நுணுக்கத்தை அறிந்தவர் பாண்டிங் என்பதால் துணைப் பயிற்சியாளராக பாண்டிங் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து