திருச்செந்தூர் முருகன் கோவிலில் ரூ.22 கோடியில் யாத்திரிகர் நிவாஸ் : அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் அறிவிப்பு

Source: provided
சென்னை : ரூ.22 கோடியில் திருச்செந்தூர் முருகன் கோவிலில் யாத்திரிகர் நிவாஸ் கட்டப்படும் என்று சட்டசபையில் அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் கூறினார்.
கட்டித்தரப்படும்...
சட்டசபையில் நேற்று கேள்வி நேரத்தின் போது, தி.மு.க. உறுப்பினர் அனிதா ராதாகிருஷ்ணன், திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் சுற்றுப்பிரகார சுவரில் இடிந்து விழுந்துள்ளது. அந்த சுவர் முற்றிலுமாக இடிக்கப்பட்டு ஓராண்டு ஆகிவிட்டது. இதனால் பக்தர்கள் பாதிக்கப்படுகிறார்கள். எனவே சுற்றுச்சுவர் கட்டித்தர அரசு நடவடிக்கை எடுக்குமா ? அதே போல் 500 அறைகள் பழுதடைந்து பயன்படுத்தபடாமல் உள்ளது. அதையும் அரசு சரி செய்யுமா? என்றார்.
யாத்திரி நிவாஸ்...
அதற்கு அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் பதிலளிக்கையில், திருச்செந்தூர் சுற்றுப்பிரகார சுவர் கட்ட மதிப்பீடு தயார் செய்யப்பட்டு வல்லுநர் குழு ஒப்புதல் பெறப்பட்டு அந்த சுவர் கட்டித்தரப்படும். அதே போல் அங்குள்ள பயணிகள் தங்கும் அறைகள் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளதாக ஆய்வு செய்து பின்னர் அறிக்கை தரப்பட்டுள்ளது. அங்கு ரூ.22 கோடி செலவில் புதிதாக யாத்திரி நிவாஸ் தங்கும் அறைகள் கட்டித்தரப்படும் என்றார்.