தொழிற்சங்க செயலாளர் மறைவுக்கு - ஓ.பி.எஸ். - இ.பி.எஸ். இரங்கல்

திங்கட்கிழமை, 10 ஜூன் 2019      தமிழகம்
EPS-OPS 2019 05 20

சென்னை : திருவண்ணாமலை தெற்கு மாவட்ட அண்ணா தொழிற்சங்கச் செயலாளர் என்.கோவிந்தராஜ் மரணமடைந்தார். அவரது மறைவுக்கு ஓ.பி.எஸ். மற்றும் இ.பி.எஸ். இரங்கல் தெரிவித்துள்ளனர்.

அண்ணா தி.மு.க. ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்வருமான எடப்பாடி பழனிசாமி ஆகியோர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது:-

‘‘திருவண்ணாமலை தெற்கு மாவட்ட அண்ணா தொழிற்சங்கச் செயலாளர் என்.கோவிந்தராஜ் அகால மரணமடைந்து விட்டார் என்ற செய்தி கேட்டு மிகுந்த வருத்தமுற்றோம். ஆரம்ப கால உடன்பிறப்பு கோவிந்தராஜ், கழகத்தின் மீதும், புரட்சித் தலைவி அம்மா மீதும் மிகுந்த விசுவாசம் கொண்டு செங்கம் ஒன்றியம் மேல்செங்கம் கிளைச் செயலாளர் மற்றும் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக திருண்ணாமலை மண்டல அண்ணா தொழிற்சங்கச் செயலாளர் முதலான பொறுப்புகளில் பணியாற்றி உள்ளார்.

அண்ணா தொழிற்சங்க உடன்பிறப்பு அன்புச் சகோதரர் கோவிந்தராஜை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு எங்களது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்வதுடன், அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் அமைதி பெற எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறோம்’’.

இவ்வாறு இரங்கல் அறிக்கையில் ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கூறியுள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து