போடி அஞ்சலகத்தில் டிஜிட்டல் இந்தியா தினம்

திங்கட்கிழமை, 1 ஜூலை 2019      தேனி
1 digital india

போடி, -  தேனி மாவட்டத்தில் பல்வேறு ஊர்களில்  பொது சேவை மையங்களில் டிஜிட்டல் இந்தியா தினம் அனுசரிக்கப்பட்டது. போடி அஞ்சலகத்தில் நடைபெற்ற டிஜிட்டல் இந்தியா தின திருவிழாவில் ஆதார் சேவை பாஸ்போர்ட் சேவை குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
     ஜூலை 1 ஆம் தேதி நாடு முழுவதும் டிஜிட்டல் இந்தியா தினமாக கொண்டாடப்படுகிறது. 4 ஆவது டிஜிட்டல் இந்தியா தினத்தை முன்னிட்டு தேனி மாவட்டத்தில் பல்வேறு ஊர்களில் மத்திய அரசின் அங்கீகாரம் பெற்ற பொது சேவை மையங்களில் டிஜிட்டல் இந்தியா தினம் அனுசரிக்கப்பட்டது. பொது சேவை மையங்களில் பாரத பிரதமரின் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கான ஓய்வூதியத் திட்டம், கிராமப்புற இளைஞர்களுக்கான கணினி பயிற்சி திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் குறித்து கிராம மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
     மேலும் டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்தும் விளக்கப்பட்டது. டிஜிட்டல் இந்தியா தின விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் பொது சேவை மையங்களின் தேனி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் எம்.ஆனந்தராஜ் தலைமையில் நடைபெற்றது.
     போடி தலைமை தபால் நிலையத்தில் நடைபெற்ற டிஜிட்டல் இந்தியா தின நிகழ்ச்சி தேனி அஞ்சலக கோட்ட கண்காணிப்பாளர் லட்சுமணன் தலைமை வகித்தார். இதில் அஞ்சலகத்தின் மூலம் ஆதார் சேவை, பாஸ்போர்ட் சேவை திட்டங்கள் செயல்படுத்துவது குறித்து அஞ்சலக வாடிக்கையாளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
     இதேபோல் போடி அருகே அம்மாபட்டி அஞ்சலகத்தில் புதிய அஞ்சல் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன,. ஏற்பாடுகளை போடி தலைமை அஞ்சலக அலுவலர் காளியப்பன் மற்றும் அஞ்சல்துறை ஊழியர்கள் செய்திருந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து