முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கர்நாடகத்தில் அரசியல் குழப்பம் முடிவுக்கு வந்தது: நம்பிக்கை வாக்கெடுப்பில் தோல்வி குமாரசாமி அரசு கவிழ்ந்தது - ஆதரவு 99 - எதிர்ப்பு 105

செவ்வாய்க்கிழமை, 23 ஜூலை 2019      இந்தியா
Image Unavailable

பெங்களூரு : கர்நாடக சட்டசபையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் குமாரசாமி அரசு தோல்வியடைந்தது. அரசுக்கு ஆதரவாக 99 பேரும், எதிராக 105 பேரும் வாக்களித்தனர்.

கர்நாடகாவில் முதல்வர் குமாரசாமி தலைமையிலான, மதசார்பற்ற ஜனதா தளம் - காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடந்து வந்தது. இங்கு, ஆளும் கூட்டணியை சேர்ந்த 15 எம்.எல்.ஏ.,க்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்ததால் குமாரசாமி அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டது. இதையடுத்து நம்பிக்கை கோரும் தீர்மானத்தை சட்டசபையில் முதல்வர் குமாரசாமி தாக்கல் செய்தார். அதன் மீது இரண்டு நாட்கள் மட்டுமே விவாதம் நடந்தது.

கடந்த, 19-ம் தேதி பெரும்பான்மையை நிரூபிக்கும் படி கவர்னர் வஜுபாய் வாலா இரண்டு முறை உத்தரவிட்டும் நம்பிக்கை வாக்கெடுப்பை முதல்வர் குமாரசாமி புறக்கணித்தார். இரண்டு நாட்கள் நடந்த கூட்டத் தொடர் நிகழ்வுகள் பற்றி மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு கவர்னர் வஜுபாய் வாலா ஏற்கனவே அறிக்கை அனுப்பியுள்ளார்.

இந்நிலையில், கர்நாடக சட்டசபையில் நேற்று 23-ம் தேதி விவாதம் நடந்ததை தொடர்ந்து நம்பிக்கை ஓட்டெடுப்பு நடந்தது. இதில் அரசுக்கு ஆதரவாக 99 பேரும் எதிராக 105 பேரும் வாக்களித்தனர். இதன் மூலம் சட்டசபையில் பெரும்பான்மை இழந்த குமாரசாமி அரசு கவிழ்ந்தது.

முன்னதாக, சட்டசபையில் குமாரசாமி பேசுகையில், கர்நாடகாவில் உள்ள 6 கோடி மக்களிடம் நான் மன்னிப்பு கேட்டு கொள்கிறேன். நான் முதல்வராக காரணமான காங்கிரஸ் தலைவர்களுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். விவசாயிகளை நான் ஏமாற்றியது கிடையாது. வாழ்க்கையில் நான் பல தவறுகளை செய்துள்ளேன். அதனை சரி செய்யவும் பல நடவடிக்கைகளை எடுத்துள்ளேன். எனக்கு கிடைத்த பதவிகளை நினைத்து மகிழ்ச்சி அடைகிறேன். ம.ஜ.த. - காங்கிரஸ் ஆட்சி அமைந்தது முதல் பா.ஜ.க. குதிரை பேரத்தை துவங்க்கியது. அரசியலுக்கு வர ஆசை இல்லை என்றாலும் காலத்தின் கட்டாயத்தால் அரசியலுக்குல் நுழைந்தேன். தந்தையின் அழுத்தம் காரணமாக அரசியலுக்கு வந்தேன். எடியூயப்பா முதல்வராக இருந்த போது நான் துரோகம் செய்யவில்லை. என்னை துரோகி என அழைக்க வேண்டாம் என எடியூரப்பா, அவரது ஆதரவாளர்களிடம் அறிவுறுத்த வேண்டும். 2018 தேர்தல் முடிவுடன் அரசியலில் இருந்து விலக நினைத்தேன். என்னுடைய ஆட்சியில் பங்கேற்று உழைத்த அனைத்து அதிகாரிகளுக்கும் நன்றி. வரும் முடிவுகள் குறித்து கவலையில்லை. இவ்வாறு அவர் பேசினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து