முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இலங்கை தமிழர் குடும்பத்துக்கு ஆதரவாக ஆஸ்திரேலிய நகரங்களில் நடந்த பேரணி

திங்கட்கிழமை, 2 செப்டம்பர் 2019      உலகம்
Image Unavailable

மெல்போர்ன் : நாடு கடத்த உத்தரவிடப்பட்ட இலங்கை தமிழர் குடும்பத்துக்கு ஆதரவாக ஆஸ்திரேலிய நகரங்களில் பேரணி நடந்தது. 

இலங்கையில் விடுதலைப்புலிகளுக்கும், சிங்கள ராணுவத்துக்கும் இடையே நடந்த உள்நாட்டுப்போர் முடிந்துவிட்ட நிலையிலும், தமிழர்கள் துன்புறுத்தப்பட்டு வந்தனர். இந்தநிலையில் தமிழர்களான நடேசலிங்கம், பிரியா தம்பதியர் துன்புறுத்தலுக்கு பயந்தனர்.

இதன்காரணமாக பிரியா 2012-ம் ஆண்டும், நடேசலிங்கம் 2013-ம் ஆண்டும், தஞ்சம்கேட்டு அகதிகளாக ஆஸ்திரேலியாவுக்கு தனித்தனியே படகு மூலம் சென்று அடைந்தனர். அங்கே நடேசலிங்கம், பிரியா தம்பதியருக்கு கோபிகா (4 வயது), தருணிகா (2) என 2 மகள்கள் பிறந்தனர்.

ஆஸ்திரேலியாவில் தற்போது கடுமையான குடியேற்ற கொள்கைகள் பின்பற்றப்படுகின்றன. படகுகளில் செல்கிற அகதிகளுக்கு தஞ்சம் தருவதில்லை.

இந்த குடும்பத்தினருக்கும் அங்கு தஞ்சம் தர முடியாது என ஆஸ்திரேலிய அரசு மறுத்து விட்டது. இவர்கள் நாடு கடத்தப்படுவதற்காக கிறிஸ்துமஸ் தீவில் உள்ள தடுப்பு மையத்தில் வைக்கப்பட்டு உள்ளனர். இவர்களை இலங்கைக்கு நாடு கடத்துமாறு ஆஸ்திரேலிய உள்துறை உத்தரவிட்டுள்ளது. அதே நேரத்தில் அவர்களை நாடு கடத்த அங்குள்ள கோர்ட்டு வரும் புதன்கிழமை வரை இடைக்கால தடை விதித்துள்ளது. இந்தநிலையில் இவர்களுக்கு ஆதரவாக ஆஸ்திரேலியாவில் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் ஓரணியில் திரண்டு உள்ளனர்.
இந்த குடும்பத்தினர் விவகாரத்தை பிரதமர் ஸ்காட் மோரீசனிடம் எதிர்க்கட்சியான தொழிற்கட்சி தலைவர் அந்தோணி அல்பனீஸ் எடுத்துச் சென்றுள்ளார்.

இதுபற்றி சிட்னியில் அவர் நிருபர்களிடம் பேசுகையில்,

இவர்கள் ஆஸ்திரேலியாவில் வாழ அனுமதிக்கப்பட வேண்டும். இது, நமது நாட்டின் குடியேற்ற கொள்கையை பலவீனப்படுத்தி விடாது. மாறாக சமூகம் சொல்வதை, வலுவாக சொல்வதை கேட்க தயாராக இருக்கும் அரசாங்கம் என்ற பெயரைத்தான் பெற்றுத்தரும் என கூறினார்.
 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து