முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழர் பூமி இயக்கம் சார்பில் பழங்குளம் கிராமத்தில் கருவேல மரங்கள் அகற்றும் பணி

திங்கட்கிழமை, 21 அக்டோபர் 2019      ராமநாதபுரம்
Image Unavailable

ராமநாதபுரம்,- ராமநாதபுரம் மாவட்ட தமிழர் பூமி இயக்கம் சார்பில் பழங்குளம் கிராமத்தில் கண்மாயில் வளர்ந்துள்ள சீமை கருவேல மரங்கள் அகற்றும் பணி தொடங்கப்பட்டது.
    தமிழர் பூமி இயக்கம் சார்பாக ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் உள்ள சீமைக் கருவேல மரங்களை முற்றிலும் அகற்றுவதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதன் முதல்கட்டமாக ராமநாதபுரம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட இளமனூர் ஊராட்சியில் அமைந்துள்ள பழங்குளம் கண்மாய் பகுதியில் அடர்ந்து வளர்ந்துள்ள சீமைக்கருவேல மரங்களை அகற்ற முடிவு செய்யப்பட்டது. பழமை பெருமைவாய்ந்த பழங்குளம் கண்மாயின் ஒருபகுதி மட்டும் தூர்வாரி சீரமைக்கப்பட்டுள்ள நிலையில் மீதம் உள்ள பகுதிகளையும் தூர்வார சீரமைக்க இப்பகுதி மக்களின் கோரிக்கையை ஏற்று மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்கேற்ப கணமாயில் வளர்ந்துள்ள சீமைக்கருவேல மரங்களை அகற்றி அதன்பின்னர் தூர்வாரபட உள்ளது. இதன்படி பழங்குளம் கண்மாயில் சீமைக்கருவேல மரங்களை ஜேசிபி எந்திரம் மூலம் அகற்றும் பணி நேற்று காலை தொடங்கியது. ராமநாதபுரம் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் நந்திகா சீமை கருவேல மரம் அகற்றும் பணிகளை துவக்கி வைத்தார்.
    நிகழ்ச்சியில், பேராவூர் ஊராட்சி செயலாளர் மற்றும் தமிழர் பூமி இயக்கம் தலைவர் விக்னேஸ்வரன் மற்றும் நிர்வாகிகள் முத்து மகேந்திரகுமார், ராஜா, சேகர், கார்த்திக், அமல் பிரகாஷ், பாபு அம்பேத், தினேஷ் ஆகியோர் கலந்து கொண்டனர். பழங்குளம் கண்மாயில் உள்ள அனைத்து சீமைக்கருவேல மரங்களையும் முழமையாக வேரோடு அகற்றி தூய்மை பெற செய்வதுடன், கரையோரங்களில் பயன்தரும் பனைமரங்களை நடவும் முடிவு செய்யப்பட்டுள்ளதாக தமிழர் பூமி இயக்கம் தலைவர் விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து