வெஸ்ட் இண்டீஸ் அணி பவுலர்களுக்கு நடிகர் அமிதாப்பச்சன் எச்சரிக்கை

சனிக்கிழமை, 7 டிசம்பர் 2019      விளையாட்டு
SPORTS-2-2019 12 07

Source: provided

மும்பை : இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வரும் வெஸ்ட் இண்டீஸ் அணி பவுலர்களுக்கு பாலிவுட் சூப்பர் ஸ்டாரான அமிதாப் பச்சன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி மூன்று 20 ஓவர் போட்டி மற்றும் 3 ஒருநாள் ஆட்டத்தில் விளையாடுகிறது. இதில் முதல் டி20 போட்டி ஐதராபாத் நகரில் நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி 5 விக்கெட் இழப்பிற்கு 207 ரன்கள் குவித்தது. இந்திய அணி பந்து வீச்சை துவம்சம் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணியின் சார்பில் 15 சிக்சர்கள் பறக்க விடப்பட்டன. கடினமான இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணி வீரர்கள் வெஸ்ட் இண்டீஸ் அணியின் பந்து வீச்சை துவம்சம் செய்தனர். இறுதியில் விராட் கோலியின் 94 ரன்களுடன் இந்தியா அபார வெற்றி பெற்றது. வெற்றி பெற்றதும், விராட் கோலி பாக்கெட்டில் இருந்து செக் புக்கை எடுத்து கையெழுத்து போடுவது போன்று செய்து காட்டினார்.

கடந்த 2017-ம் ஆண்டு ஜமைக்காவில் நடைபெற்ற ஒரு போட்டியில் விராட் கோலி 29 ரன்கள் எடுத்திருந்த போது வெஸ்ட் இண்டீஸ் அணி வீரர் கெஸ்ரிக் வில்லியம்ஸ் பந்து வீச்சில் அவுட்டாகி வெளியேறினார். விராட் கோலியின் விக்கெட்டை கொண்டாடும் வகையில் வில்லியம்ஸ் செக் புக்கில் கையெழுத்து போடுவது வித்தியாசமான செய்கை செய்து கோலியை வெறுப்பேற்றினார். அதை மறக்காத கோலி நேற்று முன்தின ஆட்டத்தில் கெஸ்ரிக் வில்லியம்சின் ஓவரை துவம்சம் செய்து வெற்றியை இந்தியா வசமாக்கியதுடன் வில்லியம்சை வெறுப்பேற்றும் விதமாக கையெழுத்து போடுவது போன்று செய்து காட்டினார்.

இந்நிலையில், பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் வெஸ்ட் இண்டீஸ் பவுலர்களுக்கு அவர் நடித்த அமர் அக்பர் அந்தோனி படத்தின் வசனத்தின் மூலம் எச்சரிக்கை விடுத்துள்ளார்.  தோழர்களே, விராட் கோலியை கிண்டல் செய்து வெறுப்பேற்ற வேண்டாம் என எத்தனை முறை சொன்னேன், ஆனால் நீங்கள் என் பேச்சைக் கேட்கவில்லை, இப்போது அவர் உங்களுக்கு ஒரு சரியான பதிலடி கொடுத்துள்ளார். அந்த வீரர்களின் முகத்தைப் பாருங்கள், விராட் கோலி அவர்களை எவ்வளவு பயமுறுத்தி விட்டார் என்று நடிகர் அமிதாப்பச்சன் இந்தியில் டுவீட் செய்தார். இந்த டுவீட்டிற்கு பதில் அளித்துள்ள விராட் கோலி, நீங்கள் எப்போதும் உத்வேகம் அளிக்கக் கூடியவர் என புன்னகைக்கும் ஸ்மைலி பொம்மையுடன் டுவிட் பதிவிட்டிருக்கிறார்.

Darbar Public Review | FDFS | Rajinikanth, Suniel Shetty, Nayanthara

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து