முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

லண்டனிலிருந்து ஐரோப்பாவுக்கு புறப்பட்ட கடைசி யூரோஸ்டார் ரயில்

ஞாயிற்றுக்கிழமை, 2 பெப்ரவரி 2020      உலகம்
Image Unavailable

லண்டன் : ஐரோப்பிய யூனியனில் 47 ஆண்டுகாலமாக உறுப்பு நாடாக இருந்த பிரிட்டன், நீண்ட இழுபறிக்கு பின் அதில் இருந்து அதிகாரப்பூர்வமாக வெளியேறியுள்ளது. இந்த வரலாற்று நிகழ்வை குறிக்கும் வகையில், பிரெக்ஸிட்’ நினைவாக ஜனவரி 31-ம் தேதியை தாங்கிய அரை பவுண்ட் மதிப்புள்ள 50 பென்ஸ் நாணயங்கள் நேற்று புழக்கத்துக்கு வந்தன.

இந்நிலையில், லண்டனில் உள்ள செயிண்ட் பான்கிராஸ் ரயில் நிலையத்திலிருந்து பிரிட்டன் எக்ஸிட்டுக்கு முந்தைய கடைசி யூரோஸ்டார் ரயில் பாரீசுக்குப் புறப்பட்டது. லண்டனிலிருந்து இந்த யூரோஸ்டாரில் புறப்பட்ட பயணிகள் வருத்தம், கோபம், கவலையை வெளியிட்டனர், சிலர் ஆதரவாகவும் கருத்துத் தெரிவித்துள்ளனர், ஆனால் இத்தனை ஆண்டு கால ஐரோப்பிய ஒன்றிய பிணைப்பிலிருந்து விடுபட்டு தெரியாத, அறியாத பிரதேசத்தில் பிரிட்டன் காலடி எடுத்து வைப்பதாக பலரும் தங்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். பிரிட்டனிலிருந்து புறப்பட்ட கடைசி யூரோ ரயில் யூரோஸ்டார் பயணியும், பாதுகாப்பு ஆலோசகருமான மார்டின் கவனா, ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்துக்கு கூறும் போது,

இது வாழ்நாளின் மிகவும் துக்ககரமான தினம், வெளியை நோக்கி பயணம் செய்வதற்குப் பதிலாக பிரிட்டன் உள்முகமாகத் திரும்பியுள்ளது, இது உலகிற்கு ஒரு செய்தியாகும் என்றார், இவர் இங்கிலாந்து அணி பிரான்சுடன் மோதும் ரக்பி போட்டியைக் காண யூரோஸ்டார் ரயிலில் பாரீசுக்கு நேற்று முன்தினம் புறப்பட்டார். இந்த ரயில் சேவை எல்லைகளற்ற ஐரோப்பா என்ற கருத்தாக்கத்தின் குறியீடாக இருந்தது. ஆனால் பிரிட்டனின் இந்த குட் பை, குறுகிய கால குட்-பை தான், மீண்டும் இணைந்து விடும் என்று பலரும் நம்பிக்கைத் தெரிவித்துள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து