மகளின் திருமணத்தில் பங்கேற்குமாறு அழைப்பு விடுத்த ரிக்சா தொழிலாளிக்கு பிரதமர் நரேந்திர மோடி பதில் கடிதம்

ஞாயிற்றுக்கிழமை, 16 பெப்ரவரி 2020      இந்தியா
Modi 2020 02 16

Source: provided

லக்னோ : மகளின் திருமணத்தில் பங்கேற்குமாறு அழைப்பு விடுத்த ரிக்சா தொழிலாளிக்கு பிரதமர் மோடி பதில் கடிதம் அனுப்பி உள்ளார். 

உ.பி.யில் பிரதமர் நரேந்திர மோடியால் தத்து எடுக்கப்பட்ட டோம்ரி என்ற கிராமத்தை சேர்ந்தவர் மங்கள் கேவத். ரிக் ஷா தொழிலாளியான இவர் தனது மகளின் திருமண அழைப்பிதழை டெல்லியில் உள்ள பிரதமர் அலுவலகத்துக்கு அனுப்பியுள்ளார். பிப்ரவரி 12-ம் தேதி நடைபெறும் இத்திருமணத்தில் பிரதமர் பங்கேற்க வேண்டும் என அதில் அவர் வேண்டுகோளும் விடுத்துள்ளார்.

இது குறித்து மங்கள் கேவத் கூறும் போது, பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுக்குமாறு எனது நண்பர்கள் சிலர் ஆலோசனை கூறினர். இதன் பேரில் பிரதமரின் டெல்லி மற்றும் வாரணாசி அலுவலகத்துக்கு அழைப்பிதழ் அனுப்பினேன் என்று தெரிவித்தார். மகள் கேவத்துக்கு பிரதமர் மோடி பதில் கடிதம் அனுப்பியுள்ளார். அதில் கேவத்தின் திருமணத்துக்கு தனது வாழ்த்துகளையும் ஆசிர்வாதங்களையும் தெரிவித்துள்ளார். திருமண நாளில் மங்கள் கேவத் இக்கடிதம் கிடைக்கப் பெற்றார்.

இது குறித்து கேவத் கூறும் போது, பிரதமர் பதில் அனுப்புவார் என நான் ஒருபோதும் எதிர்பார்க்கவில்லை. இந்தக் கடிதத்தால் மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன். திருமண விருந்தினர்கள் அனைவரிடமும் கடிதத்தை காட்டினேன் என்றார். கங்கையின் தீவிர பக்தரான கேவத், தனது வருமானத்தின் ஒரு பகுதியை கங்கை நதி வழிபாட்டில் செலவிடுகிறார். தூய்மை இந்தியா இயக்கத்திலும் தீவிர பங்காற்றி வருகிறார். பிரதமர் மோடி மூலம் பா.ஜ.க. உறுப்பினராக அவர் இணைந்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து