முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

யூசிலாந்து அணிக்கு எதிரான டி20 தொடரை கைப்பற்றி ஆஸ்திரேலியா அசத்தல்

ஞாயிற்றுக்கிழமை, 25 பெப்ரவரி 2024      விளையாட்டு
25-SPORTS-04

Source: provided

ஆக்லாந்து:ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதலாவதாக டி20 தொடர் நடைபெற்று வந்தது. இதில் முதலிரண்டு டி20 போட்டிகளிலும் ஆஸ்திரேலிய அணி வெற்றிபெற்று தொடரில் 2-0 என்ற புள்ளிக்கணக்கில் முன்னிலை வகித்தது. 

இந்நிலையில் இந்த இரு அணிகளுக்கும் இடையிலான கடைசி டி20 போட்டி இன்று நடைபெற்றது. அதில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதன்படி முதலாவதாக களமிறங்கிய ஆஸ்திரேலியா அணி 10.4 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 118 ரன்கள் எடுத்திருந்தநிலையில் மழை காரணமாக ஆட்டம் பாதியிலேயே நிறுத்தப்பட்டது. 

ஆஸ்திரேலியா அணியின் சார்பில் அதிகபட்சமாக ஹெட் 33 ரன்களும், மேத்யூ ஷாட் 27 ரன்களும் எடுத்தனர். பின்னர் ஆட்டம் டி.எல்.எஸ். முறைக்கு மாற்றப்பட்டது. இதன்படி நியூசிலாந்து அணிக்கு 10 ஓவர்களில் 126 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. இதனையடுத்து களமிறங்கிய நியூசிலாந்து அணி 10 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 98 ரன்கள் மட்டுமே எடுத்தது. அந்த அணியின் சார்பில் அதிகபட்சமாக பிலிப்ஸ் 40 ரன்கள் எடுத்தார். 

இதன்மூலம் நியூசிலாந்து அணிக்கு எதிரான கடைசி டி20 போட்டியில் 27 ரன்கள் வித்தியாசத்தில் (டி.எல்.எஸ். முறை) ஆஸ்திரேலியா அணி வெற்றிபெற்று 3-0 என்ற புள்ளிக்கணக்கில் தொடரையும் வென்று அசத்தியது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 3 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 5 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 5 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து