முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பணியின்போது உயிரிழந்த 7 மருத்துவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.1 கோடி : அமைச்சர் மா.சுப்ரமணியன் வழங்கினார்

செவ்வாய்க்கிழமை, 27 பெப்ரவரி 2024      தமிழகம்
Ma-Suphramanian 2021 12-06

Source: provided

சென்னை : சென்னை, தேனாம்பேட்டையில் உள்ள மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்குநரகத்தில், அரசு மருத்துவர்களின் பங்களிப்புடன் கூடிய சேமநல நிதி ரூ.7 கோடியினை பணியின் போது உயிரிழந்த ஏழு மருத்துவர்களின் குடும்பத்திற்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் வழங்கினார்.

அமைச்சர் மா.சுப்பிரமணியன் இது குறித்து செய்தியாளர்களிடத்தில் பேசியதாவது, “தமிழக அரசுப்பணிகளில் பணிபுரிந்து வருகின்ற மருத்துவர்கள், எதிர்பாராத வகையில் உயிரிழக்க நேரிட்டால் அவர்களின் குடும்பங்களைச் சார்ந்த வாரிசுதாரர்களுக்கு உதவித் தொகை வழங்கிட மருத்துவர்களின்  விருப்ப பங்களிப்பு நிதி 2020ஆம் ஆண்டு முதல் ஏற்படுத்தப்பட்டு செயல்பாட்டில் இருந்து வருகிறது. ஒவ்வொரு மருத்துவர்களின் விருப்பத்தின் அடிப்படையில் இந்நிதியத்தில் சேர்ந்து அவரவர்களின் பங்களிப்பாக 2020, 2021ஆம் ஆண்டில் ரூ.6000 மொத்தமாக செலுத்தினார்கள்.

முதல்வர் ஸ்டாலின் 12.10.2021 அன்று அந்த விருப்ப பங்களிப்பு தொகுப்பு நிதி என்பது ரூ.50 லட்சம் என்று இருந்ததினை ரூ.1 கோடியாக உயர்த்தி அரசாணை பிறப்பித்தார்கள். அதனடிப்படையில் மார்ச் 2022ஆம் ஆண்டு முதல் மாதந்தோறும் தத்தமது ஊதியத்திலிருந்து ரூ.500 அவரவர்களுடைய சுயவிருப்பத்தின் அடிப்படையில் பிடித்தம் செய்யப்படும் பணி நடைபெற்று வருகிறது.

இத்திட்டத்தின் அடிப்படையில் 2000 மருத்துவர்கள் மட்டுமே இணைந்திருந்தார்கள். தற்போது இத்திட்டம் 11,000 மருத்துவர்கள் விருப்பம் தெரிவித்து அதனடிப்படையில் மாதந்தோறும் தங்களது ஊதியத்திலிருந்து ரூ.500 பிடித்தம் செய்வதற்கு ஒப்பளித்து இந்த நிதியத்தில் இணைந்து இருக்கிறார்கள். மற்ற மருத்துவர்களும் படிப்படியாக இத்திட்டத்தில் இணைந்து வருகிறார்கள். இத்திட்டத்தை பொறுத்தவரை இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் இந்த வசதி தமிழகத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

மருத்துவர்கள் சங்கங்களின் ஆலோசணையினை பெற்று, 9 மருத்துவர்களுக்கு தலா ரூ.5 லட்சமும், 4 மருத்துவர்களுக்கு தலா ரூ.1 கோடியும் என்று ரூ.8.50 கோடிக்காண காசோலைகளை, 13.04.2023 அன்று மருத்துவர்களின்  குடும்பத்தாருக்கு வழங்கி தொடங்கி வைத்தார்கள். அதன் தொடர்ச்சியாக தற்போது 2-ம் கட்டமாக 2022 -ம் ஆண்டு பணியின்போது, உயிரிழந்த 7 மருத்துவர்களின்  வாரிசுதாரர்களுக்கு, தலா ரூ.1 கோடி தற்போது வழங்கப்பட்டுள்ளது.

அந்த வகையில் மருத்துவர் சஞ்சய்யின் துணைவியார் வி.பூங்குழலி, மருத்துவர் எஸ்.மோகன்குமாரின் துணைவியார் எம்.பிரியாவுக்கும், மருத்துவர் எஸ்.சின்தன்னின் துணைவியார் சண்முகப்பிரியாவுக்கும், மருத்துவர் எஸ்.முகமது ஜாஸ்மினின் தந்தை எஸ்.சிந்தாஷேக்மதாருக்கும், மருத்துவர் அருண்குமாரின் துணைவியார் மருத்துவர் எஸ்.ரூபகாளீஸ்வரிக்கும், மருத்துவர் டி.சிவகுமாரின் துணைவியார் கீதாவுக்கும், மருத்துவர் பி.பாஸ்கரனின் துணைவியார் மணிமலருக்கும் தலா ரூ. 1 கோடி சேமநல நிதி வழங்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் பயனை நன்குணர்ந்து ஏராளமாணவர்கள் இந்த நிதியத்தின் தாங்களாகவே உறுப்பினர்களாக சேர்ந்து வருகின்றனர் என்பது சிறப்பு. தமிழக முதல்வர் ஸ்டாலினால் கடந்த ஆண்டு தொடங்கப்பட்ட திட்டம் இரண்டாவது ஆண்டாக ரூ.7 கோடி நிதியத்தில் இருந்து வழங்கப்பட்டுள்ளது எனத் தெரிவித்தார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 3 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 5 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 5 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து