முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

புதுச்சேரி முதல்வர் ரங்கசாமியை மோடி செயல்படவிடவில்லை: மல்லிக்கார்ஜூன கார்கே குற்றச்சாட்டு

திங்கட்கிழமை, 15 ஏப்ரல் 2024      தமிழகம்
karke 2023-08-10

புதுச்சேரி, புதுச்சேரி முதல்வர்  ரங்கசாமியும் செயல்படவில்லை,  அவரை மோடி செயல்பட விடவுமில்லை என காங்கிரஸ் தலைவர் மல்லிக்கார்ஜுன கார்கே விமர்சித்துள்ளார். 

புதுச்சேரி தட்டாஞ்சாவடி பகுதியில் உள்ள ஒழுங்குமுறை விற்பனைக் கூட மைதானத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் முன்னாள் முதல்வர்  நாராயணசாமி,  காங்கிரஸ் கட்சி மேலிட பொறுப்பாளர் அஜோய் குமார்,  சட்டமன்ற எதிர்கட்சி தலைவர் சிவா, தமிழ்நாடு உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி,  தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை உள்ளிட்ட கூட்டணி கட்சி தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர்.

தேர்தல் பிரசாரக் பொதுக்கூட்டத்தில் மல்லிகார்ஜூனா கார்கே பேசியதாவது:

நாம் ஒருங்கிணைந்து நாட்டின் வளர்ச்சிக்கும் புதுச்சசேரியின் முன்னேற்றத்திற்காகவும் பாடுபட வேண்டும்.  புதுச்சேரி மாநில கலாச்சாரம்,  மக்களின் பழக்கவழக்கங்கள் பெருமை சேர்ப்பதாகவுள்ளது.  மத்தியில் இருந்த காங்கிரஸ் அரசு அப்போது புதுச்சேரிக்கு யூனியன் பிரதேச அங்கீகாரம் கொடுத்தது.  புதுச்சேரி முழுமையான மாநில அந்தஸ்து பெற்ற மாநிலமாக மாற வேண்டும்,  காங்கிரஸ் கட்சி புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து கிடைக்க உறுதுணையாக இருக்கும்.  காங்கிரஸ் கட்சி மக்களுக்கு கொடுத்த வாக்குறுதியை உறுதியாக நிறைவேற்றும் மாநில அந்தஸ்தை பெற்றுத்தருவோம்.  ஆனால் மோடியோ,  ரங்கசாமியோ வாக்குறுதியை நிறைவேற்றவில்லை.

பாஜக தேர்தல் அறிக்கையில் புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்த்து கொடுப்போம் என ஒரு இடத்தில் கூட கூறவில்லை.  மாநில அந்தஸ்த்து தரமாட்டோம் என்ற வாக்குறுதியை பாஜக கொடுக்காததால் புதுச்சேரியை பாஜக புறக்கணித்துள்ளது.  இந்தியா கூட்டணி ஆட்சி வந்தவுடன்,  மூடிகிடக்கும் ஆலைகள்,  ரேசன்கடைகள்,  நூற்பாலைகள் திறக்கப்படும்.

காங்கிரஸ் கட்சி ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை கொண்டது.  1950 ஆம் ஆண்டின் அரசியலமைப்பு சட்டத்தில் கூறியபடி தான் காங்கிரஸ் கட்சியானது உள்ளது.  தமிழக அமைச்சர் பொன்முடியை அமலாக்கத்துறை கைது செய்தது,  முன்னறிவிப்பு கொடுக்காமல் துன்புறுத்தியது ஜனநாயகத்தை மீறியச் செயல்,  ஜனநாயக படுகொலையாகும்,  இதை நான் வன்மையாக கண்டித்தேன். 

மோடி அரசாங்கம் தேர்தல் முறையில் ஆட்சிக்கு வராமல் குறுக்கு வழியில் ஆட்சி கவிழ்ப்பு செய்து நாடு முழுவதும் 444 எம்.எல்.ஏக்களை விலைக்கு வாங்கியவர் தான் பிரதமர் மோடி. பாஜக கொள்கையை ஏற்றுக்கொள்ளாத அமைச்சர்களோ,  எம்.எல்.ஏக்களையோ எம்.பிக்களை தொல்லை கொடுக்கும் வேலையில் மோடி அரசு ஈடுபட்டு வருகின்றது.

புதுச்சேரியில் எந்த அளவிற்கு ஆளுநரை வைத்து காங்கிரஸ் ஆட்சிக்கு தொல்லை கொடுத்தார்களோ அதே போல் தமிழகத்திலும் ஆளுநர் மூலம் நெருக்கடியை கொடுக்கின்றார் மோடி.  தமிழக அரசின் மக்கள் நலத்திட்டங்களுக்காக அரசு மூலம் கோப்புகளை அனுப்பினால் அதை தடுத்து நிறுத்துவதும் மறுப்பதும் அம்பேத்கார் கொண்டு வந்த அரசியலைமைப்பு சட்டத்தை மீறிய செயலை மோடி செய்து வருகின்றார். புதுச்சேரி முதலமைச்சரை பார்த்து பரிதாப்படுகின்றேன்,  அவரும் செயல்படவில்லை அவரை மோடியும் செயல்பட விட மறுக்கின்றார். இவ்வாறு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே பேசினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து