முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கோவையில் அ.தி.மு.க. வேட்பாளரை ஆதரித்து நடிகர் கார்த்திக் வாக்கு சேகரிப்பு

புதன்கிழமை, 17 ஏப்ரல் 2024      சினிமா
Karthik 2024-04-17

Source: provided

கோவை : கோவை தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் சிங்கை ராமச்சந்திரனை ஆதரித்து நடிகர் கார்த்திக் பிரச்சாரம் மேற்கொண்டார். 

,தமிழகத்தில் நாளை பாராளுமன்ற மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு அரசியல் கட்சியினர் இறுதிக்கட்ட வாக்கு சேகரிப்பில் தீவிரமாக ஈடுபட்டனர். 

அந்த வகையில் கோவை தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் சிங்கை ராமச்சந்திரனை ஆதரித்து நடிகர் கார்த்திக் நேற்று பிரச்சாரம் மேற்கொண்டார். கோவை சூளூர் பகுதியில் நடைபெற்ற பிரச்சாரத்தின்போது பேசிய அவர், 

நம்முடைய எதிர்காலம், அடுத்த 5 ஆண்டுகளை பார்த்துக்கொள்ளப்போவது அ.தி.மு.க.தான். கோவை தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் சிங்கை ராமச்சந்திரனை பாராளுமன்றத்திற்கு அனுப்பி, அதன் பலனை மக்கள் பெற வேண்டும்   என்று தெரிவித்தார்.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து